பல் வலி உடனே போக இயற்கையான வீட்டு மருத்துவ முறைகள்

பல் வலி ஏற்படக் காரணங்கள்:

1.பல் முளைப்பதனால்
2.பல் விழுவதனால்
3.பல் சொத்தை
4.பல் ஈறு வீக்கம்
5.ஞானப்பல் முளைக்கும் போது
6.பல் தேய்வு
7.பல் ஈறு தேய்வு

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் பொழுதும் பதின் பருவத்தில் ஞானப்பல் முளைக்கும் பொழுதும் பல் வலி ஏற்படுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் பல் சொத்தை, பல் ஈறு வீக்கம், பல் ஈறு தேய்வு போன்றவை தவறான உணவுப் பழக்கத்தினால் ஏற்படுபவை. இதனை நாம் முறையான உணவு பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் சரி செய்யலாம்.

பல் வலி குணமாக தமிழ் மருத்துவம்

பல் வலி உடனே போக கிராம்பு ஓர் அருமருந்து

இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

பல் வலி குறைய உப்பு ஒரு மருந்து

பல்வலி ஏற்பட்டால், ஒரு கப் வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பல் வலி படிபடியாக குறைய பூண்டு மருந்து

ஒரு பல் பூண்டை நசுக்கி பல் வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

பல் வலி குறைய வெங்காயம் மருந்து

பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

பல் வலி குணமாக கொய்யா இலை

வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம். பல் வலி குறையும்.

பல் வலி உடனே குணமாக ஐஸ் கட்டிகள்

பொதுவாக வலி உள்ள இடத்திற்கு ஐஸ் ஒத்தடம் நல்ல நிவாரணம் தரும். பற்களுக்கும் இந்த முறை நல்ல பலனை அளிக்கும். ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

பல் வலி வராமலே தடுக்க நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்ற கால்சியம் உணவுகள்

பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

பல் வலி குணமாக நல்லெண்ணெய் (ஆயில் புல்லிங்)

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

பல் வலி குறைய இஞ்சி சாறு மருந்து

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.

பல் வலி உடனே போக சுக்கு பொடி மருந்து

சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

பல் வலி காணாமல் போக சூடம் ஓர் மருந்து

சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது காணாமல் போய்விடும்.

பல் வலி குறைய கடுகு எண்ணை, உப்பு மருந்து

பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி கடுகு எண்ணெய். கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பல் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

பல் வலி குணமாக ஆலமரத்துப்பட்டை ஒரு மருந்து

ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும்.

பல் வலி குணமாக எலுமிச்சைபழத் தோல் மருந்து

எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் மூலம் பல்லின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம் மற்றும் பல் வலியும் குறையும்.

பல் வலி குணமாக ஏலக்காய் ஒரு அருமருந்து

ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் ஆகியவை குணமாகும்.

பல் வலி குணமாக மிளகு மற்றும் கிராம்பு மருந்து

ஐந்து மிளகு மற்றும் இரண்டு கிராம்பு எடுத்து அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது இரண்டையும் பொடியாக்கி, அந்த பொடியை நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளலாம்.

பல் வலி முற்றிலும் குணமாக கற்றாளை ஜெல் மருந்து

இதில் ஆன்ட்டி செப்ட்டிக் ப்ராப்பர்டீஸ் நிறையவே இருக்கிறது. இவை பற்களில் தடவுவதால் பாக்டீரியா பரவாமல் தடுக்கப்படும். ஈறு வீங்கியிருந்தால் இந்த ஜெல்லைக் கொண்டு லேசான அழுத்தம் கொடுத்து வர வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பல் வலி குணமாக கோதுமைப்புல் சாறு ஒரு மருந்து

கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.




———————————————————-
கிராம்பு – Kiraambu – Clove
எலுமிச்சை – Elumichai – Lemon
பால் – Paal – Milk
மிளகு – Milaku – Pepper
நெல்லிக்காய் – Nellikkaai – Gooseberry
உப்பு – Uppu – Salt
பூண்டு – Poondu – Garlic
வெங்காயம் – Venkayam – Onion
கொய்யா இலை – Koyyaa ilai – Guava leaf
சோற்றுக் கற்றாளை – Sotrukkatraalai – Aloe vera
சுக்கு – Sukku – Dried Ginger
ஆலமரத்துப்பட்டை – Aalamaraththupattai – Banyan tree bark
இஞ்சி – Inchi – Ginger
வெண்ணெய் – Vennai – Butter
கடுகு எண்ணெய் – Kadugu ennai – Mustard Oil
கோதுமைப்புல் – Kodumai pul – Wheat Grass
நல்லெண்ணெய் – Nallennei – Sesame oil
ஏலக்காய் – Yelakkai – Cardamom
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.