சிலருக்கு முடிக்கட்டு நன்றாக இருக்கும், ஒரு சிலருக்கு முடிக்கட்டு குறைவாக இருக்கும். முடிக்கட்டு என்பது பரம்பரை பரம்பரையாக வரக் கூடிய ஒன்று. முடிக்கட்டு என்பது முடியின் அடர்த்தியை குறிப்பதாகும். ஒரு முடிக்கும் அடுத்த முடிக்கும் உள்ள இடைவெளி என்று கூட கூறலாம்.முடிக்கட்டு இல்லாதவர்களுக்கு முடி அடர்த்தியாக வரவே வராது என்று சொல்ல முடியாது. தகுந்த இயற்கை மருத்துவத்தை எடுத்துக் கொண்டால் முடி அடர்த்தியாக வளரும்.
முடி வளர வெந்தயம் ஓர் அருமருந்து
முடி நன்கு வளர்வதற்கு வெந்தயம் ஒரு அருமருந்தாகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்த கூடிய அற்புத குணங்கள் கொண்டது வெந்தயம். வெந்தயத்தை உடலுக்கு வெளியிலும் உபயோகிக்கலாம், உடலுக்குள்ளும் உட்கொள்ளலாம்.
இரவில் படுக்கைக்கு போகும் முன் கையளவு வெந்தயத்தை எடுத்து சிறிய பாத்திரத்தில் குடிக்கும் நீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இரவில் மறந்து விட்டாலும் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்தால் போதுமானது.
ஊற வைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து தலையில் தடவ வேண்டும். தலை முடியின் வேர் கால்களில் படும்படி தடவினால் சால சிறந்தது. தலையில் தடவிய பின் நீங்களே வெந்தயத்தின் குளிர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக உணர முடியும். சிறிது நேரம் கழித்து குளித்து விடலாம். குளிக்கும் போது வெந்தயத்தை தலையில் இருந்து நன்கு அலசி விட வேண்டும். இல்லையெனில் குளித்து முடித்த பின் ஆங்காங்கே வெள்ளை பொடி போன்று தலையில் தெரியும்.
தினமும் இதை செய்வது முடி வளருவதை சிறப்பாக ஊக்குவிக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது வெந்தய குளியல் முடி வளர்ச்சிக்கு கண்டிப்பானது.
வெந்தய மருத்துவம் குளிர்ச்சியான மருத்துவம். அதனால் சளி பிடித்த நாட்களில் வெந்தய குளியலை தவிர்த்து விடுங்கள்.
வெந்தயம் – Venthayam – Fenugreek
———————————————————-