இதய வால்வு அடைப்பு நீங்க இயற்கையான மருத்துவ முறைகள்

எதையும் தாங்கும் இதயம் என்ற கவிதை அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் இதயத்திற்கு கூட மிதமான ஓய்வு தேவைபடுகிறது. இதயம் காக்க மிகவும் எளிமையான வழி உள்ளது. அது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது. நாம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் நம் இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பது மருத்துவர்கள் இதய நோயாளிகளுக்கு கொடுக்கும் முக்கியமான அறிவுரை.

இதய வால்வு நோய்

இதய வால்வு நோய் என்பது இதய வால்வுகள் அதன் வேலையை ஒழுங்காக செய்யாமல் இருக்கும் போது ஏற்படுகிறது. வயது ஏற ஏற இதய வால்வானது கொழுப்பு படிந்து சுருங்க தொடங்கும். அதிகமான பால் சாப்பிடும் ஒரு சிலருக்கு கால்சியம் படிந்து இதய வால்வு சுருங்க ஆரம்பிக்கும். இவர்களுக்கு பால்ய வயதில் ருமாட்டிக் பீவர் எனும் மூட்டு வலியுடன் காய்ச்சல் வந்து அதை கவனிக்காமல் விட்டு இருப்பார்கள். அந்த காய்ச்சல் சுமார் இருபது வருடங்களுக்குப் பின் இதய வால்வில் அடைப்பை ஏற்படுத்தும் தன்மையுடையது. இவ்வாறு வால்வு சுருங்கினால் அதனால் அதன் வேலையை சரிவர செய்ய இயலாது. வேறு சில பிரச்சனைகளாலும் இதய வால்வு நோய் ஏற்படும்.

இதய வால்வுகளின் வேலை

இதயத்தின் செயல்பாடுகளில் இதய வால்வுகள் பெரும்பங்கு வகிக்கின்றன.  மனிதனின் இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. இதய வால்வுகள் நான்கு அறைகளின் வாயில்களிலும் இருக்கின்றன. இந்த வால்வுகளில் இரத்தம் ஒரே திசையாக பாய்கிறது. நமது இதயம் உடலின் சற்று இடது புறமாக அமைந்து இருகின்றது. வலது ஆரிகில் மற்றும் வலது வென்றிகில் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு மூவிதல் வால்வு என்று பெயர். இடது ஆரிகில் மற்றும் வலது வென்றிகில் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு ஈரிதழ் வால்வு என்று பெயர். இதயத்தின் முக்கியமான வேலை ஆச்சிஜன் கலந்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கடத்துவதாகும். இதயத்தில் பெருந்தமணி இதயத்தின் இடது கீழ் அறையில் உள்ளது. அது பல கிளைகளாக பிரிந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இது ஆக்சிஜன் கலந்த சுத்த இரத்தத்தை உடல் முழுவதும் கடத்துகிறது. அதே நேரத்தில் சிரை குழாய்கள் மூலம் உடலின் எல்லா பாகங்களிலும் உள்ள கரியமில வாயு கலந்த அசுத்த இரத்தம் சிரை வால்வுகளின் மூலம் இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து அடைகிறது. இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து நுரையீரல் குழாய்கள் கிளம்புகின்றன. அது வலது இடது என இரண்டு பிரிவுகளாகப்பிரிந்து வலது மற்றும் இடது நுரையீரல்களுக்கு செல்கின்றன. நுரையீரலில் உள்ளிளுக்கப்பட்ட ஆக்ஸிஜன் இரத்தத்தை சுத்தப்படுதுகிறது. வெளிவிடும் மூச்சுக்காற்றின் மூலம் இரத்தத்தில் உள்ள கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு இரத்தம் சுத்திகரிக்கபடுகிறது. சுத்திகரிக்கப்பட்ட இரத்தம் இதய வால்வுகளின் மூலம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இதயம் ஓய்வில்லாமல் இயங்குவதற்கு இதுதான் காரணம். மற்ற பாகங்களைப்போல் இதயம் ஓய்வெடுத்தால் நம் உடலில் உள்ள அசுத்த இரத்தமானது சுத்தமாகாது. மேலும் நம் உடலின் பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களும் சென்றடையாது.

இதய வால்வு அடைப்பு

நமது இதயம் செயல்பட சக்தியாக விளங்குவது இரத்த வால்வுகள்தான். இந்த இரத்த நாளங்கள் சுருங்கி விரிவதன் மூலம் இரத்தம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இதனை சுருங்கி விரியச்செய்யும் ஒரு இரசாயனப்பொருள் நைட்ரிக் ஆக்சைடு ஆகும். இதனை நமது உடலே உற்பத்தி செய்கிறது. பல்வேறு காரணங்களினால் இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பது தடுக்கபடுகிறது. உதாரணமாக இரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரிக்கும் போதும், இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போதும், உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும், மன அழுத்தம் போன்ற மன குறைபாடு காரணமாகவும் நைட்ரிக் ஆக்சைடு சுரப்பது குறைகிறது. அசைவ உணவு அதிகம் உட்கொள்வதினாலும் இதன் உற்பத்தி குறைகிறது. இதனால் இரத்த வால்வுகள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது. அபொழுது இரத்த நாளங்களில் கொழுப்பு படிய தொடங்கும். காலபோக்கில் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. அதுவே மாரடைப்புக்கு வழி வகுக்கிறது.

இதய வால்வுகளின் அடைப்பு நீங்க உடற்பயிற்சி

இதயம் பலப்பட மற்றும் இதய நோய் வரும் முன் காப்பதற்கு ஒரு சிறந்த வழி உடற்பயிற்சி. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எந்த நோயும் வராது. குறிப்பாக இதயம் தொடர்பான நோய் வரவே வராது. தினமும் மிக எளிதான உடற்பயிற்சியான நடைபயிற்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மிதமான வேகத்தில் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இதய வால்வுகளின் அடைப்பு நீங்க பூண்டு ஒரு அருமருந்து

இதய நோய் உள்ளவர்கள் தினசரி உணவில் பூண்டு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


இதய வால்வுகளின் அடைப்பு நீங்க சீரகம் மருந்து

சீரகத்தை மூன்று விரல்களால் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இரத்தத்தை நீர்மை படுத்தும் குணம் சீரகத்திற்கு உண்டு. இதய வால்வு சுருங்கி இருக்கும் போது இந்த சீரக மருந்தை எடுத்து வந்தால் இரத்தம் அதன் அடர்த்தி குறைந்து மிக எளிமையாக சுருங்கிய இதய வால்வில் சென்று வரும். இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். வீட்டில் எளிமையாக கிடைக்கும் சீரகத்தை வைத்து நாம் செய்யும் இந்த எளிய முறையினால் நம் உயிரே கூட காப்பாற்றப்படலாம்.


இதய வால்வுகளின் அடைப்பு நீங்க வெங்காயம் மருந்து

வெங்காயத்தில் இரத்தத்தை நீர்மைப்படுத்தும் குணமும் கொழுப்பை கரைக்கும் குணமும் உண்டு. தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை எடுத்து கொள்வதன் மூலம் சுருங்கிய இதய வால்வுகளில்  இரத்தம் எளிதாக சென்று வர உதவுவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை கரைத்து இதய வால்வின் அடைப்பையும் குணப்படுத்தலாம்.


இதய வால்வுகளின் அடைப்பு நீங்க பூண்டு, பால் மருந்து

தினமும் 5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகி வர இதய வால்வுகளில் உள்ள அடைப்பு நீங்குவதொடு மீண்டும் இரத்த குழாயில் அடைப்பு  வராமலும் தடுக்கலாம்.


இதய வால்வு அடைப்பு நீங்க எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, ஆப்பிள் சைடர் வினிகர், தேன் மருந்து

ஒரு டம்ளர் வடிகட்டிய எலுமிச்சை சாறு, ஒரு டம்ளர் பூண்டு சாறு, ஒரு டம்ளர் இஞ்சி சாறு, ஒரு டம்ளர் ஆப்பிள் சைடர் வினிகர் நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு இந்த கலவையை அடுப்பில் சிம்மரில் வைத்து 60 நிமிடங்கள் வைக்க வேண்டும். நான்கு பங்கு மூன்றாக மாறியதும் அடுப்பை அணைத்து அதனுடன் சம அளவில் தேனை சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும். நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டால் இதய அடைப்புக்கான அறுவை சிகிச்சையில் இருந்து விடுபடலாம். இதய அடைப்புக்கான ஓர் அருமையான மருந்து இது.


இதய வால்வு அடைப்பு நீங்க தயிர் மருந்து

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இதய வால்வு அடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


இதய வால்வு அடைப்பு நீங்க இஞ்சி மருந்து

இதய வால்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து. இஞ்சி சாறினை தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும். இஞ்சி சாருடன் தேன் எலுமிச்சை சாறு சர்க்கரை கலந்து குடித்தால் சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.


இதய வால்வு அடைப்பு நீங்க சீரகத் தண்ணீர் மருந்து

கொதிக்க வைத்து ஆற வாய்த்த தண்ணீரில் சீரகபொடி சேர்த்து 12 மணி நேரம் ஊற வைத்து தினமும் அருந்தி வர வேண்டும். இந்த எளிய முறையினால் இரத்த அழுத்தம் என்னும் மிகப்பெரிய இதய நோயில் இருந்து விடுபடலாம்.


இதய வால்வு அடைப்பு நீங்க அகத்திக்கீரை மருந்து

எல்லா இடங்களிலும் கிடைக்கும் அகதிக்கீரைக்கு இதய நோயை குணப்படுத்தும் திறன் உள்ளது. வாரத்திற்கு இரு முறை இதனை உண்டு வந்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.


இதய வால்வு அடைப்பு நீங்க செம்பருத்திப்பூ, எலுமிச்சை, சர்க்கரை மருந்து

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செம்பருதிபூவினை எடுத்து அதன் இதழ்களை தனியே பிரித்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை  சேர்த்து நன்கு அரைத்து காய்ச்சி நல்ல பதத்திற்கு வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். தினமும் காலை வெறும் வயிற்றில் சிறிது நீர் சேர்த்து இதனை அருந்தி வர இதய நோய் பாதிப்பு குறையும்.


இதய வால்வு அடைப்பு நீங்க ரோஜா குல்கந்து மருந்து

இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு பொருள். மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.


இதய வால்வு அடைப்பு நீங்க சின்ன வெங்காயம், சர்க்கரை மருந்து

சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் இதயம் பலப்படும்
———————————————————-
பால் – Paal – Milk
எலுமிச்சை – Elumichai – Lemon
தயிர் – Thayir – Curd
பூண்டு – Poondu – Garlic
தேன் – Thean – Honey
இஞ்சி – Inchi – Ginger
சீரகம் – Seeragam – Cumin
வெங்காயம் – Venkayam – Onion
செம்பருத்திப்பூ – Semparuthi poo – Hibiscus flower
அகத்திக் கீரை – Agathi Keerai – Agathi Spinach
ரோஜா குல்கந்து – Roja Kulkandhu – Rose Gulkand
ஆப்பிள் சைடர் வினிகர் – Apple cider vinegar – Apple Cider Vinegar
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.