உடல் களைப்பு உடனடியாக நீங்க எளிய தமிழ் மருத்துவ முறைகள்

உடல் களைப்பு என்பது உடலின் அனைத்து ஆற்றலையும் இழந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் போகும் நிலை ஆகும். தொடர்ந்து தூக்கம் இல்லாமல் வேலை பார்த்தால் களைப்பு தானாக ஏற்படும். களைப்போடு பார்க்கும் வேலை சுத்தமாகவும் இருக்காது விரைவாகவும் முடியாது. ஒரு குட்டி தூக்கம் போட்டு போட்டு களைப்பை போக்கலாம். அதிக தூரம் பயணம் செய்யும் அனுபவசாலி வாகன ஒட்டிகளுக்கு தூக்கத்தின் அருமை புரியும். பயணத்தின் நடுவே ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டே பயணத்தை தொடர்வர். இல்லையென்றால் இரு வாகன ஓட்டிகளாக மாறி மாறி ஓய்வு எடுத்து கொண்டு களைப்பை போக்கி போக்கி ஓட்டுவர்.  களைப்பு ஏற்படும் போது கண்டிப்பாக உடலுக்கு தூக்கம் அவசியமாகும். சிலருக்கு தூக்கம் போட்ட பின்னும் உடல் களைப்பாகவே தோன்றும். இப்படிபட்ட களைப்புக்கு தூக்கம் ஒரு தீர்வாகாது. பின் வரும் ஏதாவது ஒரு குறைபாடு அவர்களுக்கு தெரியாமலே இருக்கலாம்.

உடல் களைப்பு காரணங்கள்:

இரத்தசோகை

பெரும்பாலான உடல் களைப்பிற்கு காரணம் உடலின் இரும்புச்சத்து குறைபாடு ஆகும். இரும்புச்சத்து குறைபாட்டால் உடலில் இரத்தத்தின் அளவு குறையும். உடலின் இயக்கத்திற்கு  தேவையான இரத்தம் குறைவாக இருப்பதால் உடலின் இயக்கம் குறையும். அதனால் உடல் களைப்பாகவே தோன்றும்.

தைராய்டு

தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் களைப்புடனே காணப்படுவார்கள். இதற்கான முக்கியமான காரணம் தைராக்சின் என்னும் ஹார்மோன் குறைவாக சுரப்பதாகும்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் குளுகோசின் அளவு அதிகமாக இருப்பதால் உடலில் எப்போதும் சோர்வு காணப்படும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம் உள்ளவர்கள் அதிகம் யோசித்துக் கொண்டே இருப்பதால் மனமும் உடலும் அதிகம் களைப்படைகிறது.

கால் வலி

அதிகம் நடத்தல் மற்றும் வேலை காரணமாக கால்களில் வலி ஏற்படும். இதனால் இரவில் நன்றாக தூங்க முடியாது. தூக்கம் இல்லாததால் உடலில் களைப்பு ஏற்படும்.

உடற்பயிற்சி

மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ உடற்பயிற்சி செய்வதால் உடலில் களைப்பு ஏற்படும். விட்டு விட்டும் உடற்பயிற்சி செய்யக்கூடாது. சரியான அளவு உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதே உடலுக்கு நன்மை தரும்.

மது

மது அதிகம் அருந்துபவர்களாக இருந்தால் களைப்பு கண்டிப்பாக ஏற்படும். உடலில் உள்ள பல பகுதிகளின் செயல்பாட்டினை மது கெடுத்து விடும். மதுவை விடுவதே ஒரே தீர்வு.

காபின்

காபி அதிகம் அருந்துபவர்கள் உடலில் காபின் அதிகம் கலப்பதால் களைப்பு ஏற்படுகிறது.

பகல் தூக்கம்

பகலில் அதிகம் தூங்குவதால் இரவில் தூக்கம் ஏற்படாது. இந்த நேர மாற்றம் உடலுக்கு ஒவ்வாது. அதனால் உடலில் அதிகம் களைப்பு ஏற்படுகிறது.

உடலில் ஏற்படும் நோய்கள்

உடலில் கான்சர் , மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்பட்டால் உடல் சோர்வடையும்.

நரம்பியல் பிரச்சினைகள்

நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்கள் உடல் சோர்வுடன் இருப்பார்கள்.


உடல் களைப்பு நீங்க தமிழ் மருத்துவங்கள்

உடல் களைப்பை போக்க உருளைக்கிழங்கு நீர்

உருளைக்கிழங்கை நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து அந்த நீரை காலையில் குடித்தால் களைப்பு நீங்கும். உருளைக்கிழங்கை ஊற வைக்கும் பொது அதை குளிர் சாதனபெட்டியில் வைக்க வேண்டும். இதற்குக் காரணம் உருளைக்கிழங்கை நீரில் ஊற வைக்கும் போது அந்த நீர் பொட்டாசியம் நிறைந்த நீராக மாறுகிறது. பொட்டடசியத்திற்கு உடல் களைப்பை போக்கும் சக்தி உண்டு.


உடல் களைப்பு நீங்க எலுமிச்சைபழச் சாறு

எலுமிச்சை பழத்தை ஒரு டம்ளர் நீரில் பிழிந்து களைப்பு ஏற்படும் பொழுது குடித்தால் மிகவும் நல்ல பலனைத் தரும். குளிர் காலமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் கலக்கலாம். வெயில் காலமாக இருந்தால் குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கலாம். நல்ல பலன் அளிக்கும்.நீரிழப்பினால் ஏற்படக் கூடிய களைப்பிற்கு இது ஒரு நல்ல மருந்து.


உடல் சோர்வு நீங்க எளிதாக சீரணம் ஆகும் உணவு உட்கொள்ளும் முறை

எளிதாக சீரணமாகும் பொருளை உணவாக உட்கொண்டால் களைப்பு ஏற்படாது. நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


உடல் சோர்வைப் போக்க கீரை வகைகள்

கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. களைப்பிற்குக் காரணமான இரும்புச்சத்து குறைபாடு, கீரை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் சரி செய்யப்படுகிறது.


உடல் களைப்பிற்கு தானிய வகைகள்

காலை உணவாக தானிய வகைகளை உண்பதால் உடலுக்குக் தேவையான அனைத்து சக்திகளும் கிடைப்பதால் களைப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு.


உடல் களைப்பைப் போக்க புரதச்சத்து மிக்க உணவுகள்

மதிய உணவுக்குப் பின் பெரும்பாலானவர்களுக்கு களைப்பு ஏற்படும். இதனைத் தவிர்க்க மதிய உணவில் புரதம் அதிகம் உள்ள பொருட்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


உடல் சோர்வைக் களைய பால், தேன் ஒரு அருமருந்து

பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் உடலின் களைப்பு நீங்கி உற்சாகம் பெறலாம்.


உடல் புத்துணர்வு பெற வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதம்

எப்பொழுதேல்லாம் களைப்பாக இருக்கிறதோ அப்பொழுது ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கி சுறுசுறுப்பு அடையலாம். இது ரொம்ப சாதரணமாக தோன்றும். ஆனால் செய்து பாருங்கள் வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். அனுபவம் மிக்க வியாபாரிகள் பஸ் ஸ்டான்ட்களில் பல ஊர்களுக்கு சென்று வரும் களைப்பை நீக்க ஒவ்வொரு ஊரிலும் இறங்கி ஒரே ஒரே வாழைப்பழம் சாப்பிட்டு களைப்பை விரட்டி விரட்டி பயணத்தை தொடர்வர். ஆனால் இந்த உண்மை தெரியாமல் இந்த கால இளம் வியாபாரிகள் கடைகளில் Junk foods எனும் குப்பை உணவுகளை சாப்பிட்டு அதிக களைப்பை அடைந்து கொண்டிருக்கின்றனர்.


உடல் ஆற்றல் பெற பாதாம் ஒரு மருந்து

பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இதற்கு உடல் களைப்பைப் போக்கும் திறன் உள்ளது. இரவில் இரண்டு பாதாமை நீரில் ஊற வைத்து அந்த நீரைக் காலையில் குடித்து விட்டு பாதாமை சாப்பிட்டால் அந்த நாள் முழுதும் உற்சாகமாக இருக்கும்.


உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஆப்பிள் மற்றும் தக்காளி மருந்து

ஆப்பிள் மற்றும் தக்காளியை அரைத்து அந்த சாறைக் குடித்தால் களைப்பு உடனடியாக நீங்கும்.


உடல் சோர்வை நீக்கும் தேன் மருந்து

தேனில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. களைப்பு ஏற்படும் போது சிறிது வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்தால் களைப்பு நீங்கும்.


உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் உடலின் செரிமான சக்தி அதிகமாகும். அதனால் களைப்பு நீங்கி புத்துணர்வு பெறலாம்.


உடல் களைப்பு நீங்க திராட்சை சாறு ஒரு மருந்து

திராட்சை சாறு அருந்துவதால் உடல் களைப்பு நீங்கும்.


உடல் களைப்பு நீங்க பேரீச்சம்பழம்

தினமும் பேரீச்சம்பழம் 4-5 சாப்பிடுவதன் மூலம் இரத்தசோகையை விரட்டலாம். இரத்தசோகை காரணமாக ஏற்படும் களைப்பு இதன் மூலம் நீங்கும்.


உடல் களைப்பிற்கு  உலர் திராட்சை மருந்து

உலர்திராட்சை இரும்புசத்து நிறைந்தது. தினமும் 5-6  உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு ஆற்றல் கொடுப்பதோடு உடல் களைப்பையும் போகுகிறது.




———————————————————-
தேன் – Thean – Honey
பேரீச்சம் பழம் – Pericham pazham – Dates fruit
திராட்சை – Thiratchai – Grapes
ஆரஞ்சு – Orange – Orange
பால் – Paal – Milk
ஆப்பிள் – Apple – Apple
உலர்திராட்சை – Ular Thiratchai – Dry Grapes
வாழைப்பழம் – Vaalaipazham – Banana
பாதாம் பருப்பு – Paadaam paruppu – Almond
தக்காளி – Thakkaali – Tomato
உருளைக் கிழங்கு – Urulaikilangu – Potatoes
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.