கண் கருவளையம் மறைய எளிய தமிழ் வீட்டு வைத்திய முறைகள்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல பிரதிபலிக்கும். கண் கருவளையம் என்பது கண்களுக்கு கீழே உள்ள தோல் பகுதி மட்டும் கருத்து காணப்படுவதாகும். பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். சில ஆண்களும் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் ஏதோ துக்க வீட்டில் விசாரிப்பது போல் பார்ப்பவர்கள் எல்லாம் என்ன கருவளையம் என்ன கருவளையம் என்று கேட்டு கேட்டு அவர்களுக்கு தெரிந்த எல்லா மருத்துவத்தையும் சொல்லி மனதளவில் சோர்வடைய செய்து விடுவர். கண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல் 2மி. மீ தடிமனும் கொண்டது. அதனால் மற்ற தோலை விட கண்களுக்கு கீழ் உள்ள தோல் மிக விரைவில் பாதிப்படைகிறது. மிக விரைவில் கருவளையத்தை மறைய வைக்கலாம்.

கண் கருவளையம் ஏற்பட காரணங்கள்

அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு

நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது. வார விடுமுறையில் வீட்டில் உள்ள போது கீழே கொடுத்துள்ள இயற்கையான மருந்துகளை கண்ணின் கீழ் உள்ள கருவளையத்தின் மேல் போடலாம். ஆனால் வேலை பார்க்கும் இடத்தில் அவ்வாறு போட முடியாது. ஓய்வுக்காக தூங்கவும் முடியாது. அதற்கு என்ன தான் தீர்வு என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ள தேவையில்லை. வேலையின் நடுவே தூங்க முடியாது தான் ஆனால் ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு முறை ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடி கண் விழிகளை அசைக்காமல் கண்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். கைக்குட்டையில் தண்ணீரை லேசாக நனைத்து கண்களுக்கு வைத்துக் கொண்டு கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்ததால் இன்னும் வெகு சிறப்பு.

இரவு அதிக நேரம் விழித்திருத்தல்

தூக்கம் நமது உடலுக்கும் கண்களுக்கும் சிறந்த ஓய்வு ஆகும். சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நமது நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும். ஒரு நாளுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதிகமாக கண்களை கசக்குதல்

கண்களில் ஏற்படும் தொற்றினால் கண்களில் சில நேரம் அரிப்பு ஏற்படும். இதனால் கண்களை கசக்க நேரிடும். அதிகமாக கண்களை கசக்குவதால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்குக் கீழ் உள்ள தோல் கருமையடைகிறது. அதிகமாக கண்ணை கசக்கி அதனால் உண்டாகும் கருவளையம் அதுவாகவே மறைந்து விடும்.

மரபியல் காரணங்கள்

சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு ஏற்படலாம். சத்துக்குறைவினால் சிலருக்கு கண் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்க்கு தீர்வு.

முகத்தில் பூசப்படும் கிரீம்கள்

பெண்கள் அன்றாடம் முகத்தில் பல கிரீம்களை உபயோகிக்கின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்கு அடியில் கருமையாக மாறுகிறது. அப்படிப்பட்ட க்ரீம்களை கண்டறிந்து எதிர்காலத்தில் அப்படிப்பட்ட க்ரீம்களை தவிர்த்து கண்ணின் கருவளையம் வருவதை தவிர்க்கலாம்.

இரத்த நரம்புகள்

கண்களுக்கு அடியில் உள்ள இரத்த நரம்புகள் கூட சில நேரம் கருமையாக தோற்றம் அளிக்கலாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை.

அதிகம் வெயிலில் அலைவது

அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது. அதனால் வெயில் காலங்களில் கருவளையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது கண்ணை குளிர்ச்சி படுத்தும் விதமாக கேரட் அல்லது வெள்ளரிபிஞ்சை மெல்லிதாய் நறுக்கி கண்ணின் மேல் வைத்தல் நலம் பயக்கும்.

வயது முதிர்வு

கண் கருவளையத்திற்கு வயது மிகவும் முக்கியமான காரணமாகும். வயது அதிகமானால் தோலில் தொய்வு ஏற்பட்டு கண் கருவளையம் ஏற்படும்.

புகை மற்றும் மதுப்பழக்கம்

புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் மிக எளிதாக கண் கருவளையதிற்கு ஆளாகிறார்கள்.

ஹார்மோன்

ஹார்மோன் சுரப்பு சரியாக இல்லாத காரணத்தினால் கருவளையம் ஏற்படலாம்.

நீரிழப்பு

போதுமான அளவு நீர் அருந்தாமல் இருந்தாலும் கருவளையம் ஏற்படும். பெரும்பாலான ஆய்வு முடிவுகள் உடலில் சரியான அளவு நீர் இல்லாததினால் தான் கண் கருவளையம் உண்டாவதாக தெரிவிக்கின்றன. காலையில் எழுந்தவுடன் ஒரு முழு செம்பு நீர் அருந்துவது வாட்டர் தெரபி எனப்படும் நீர் சிகிச்சையின் முக்கியமான ஒரு பகுதி. ஆரம்பத்தில் முழு செம்பு நீர் அருந்த கஷ்டமாகத்தான் இருக்கும். சிறிது சிறிதாக ஒரு டம்ளர் என்று ஆரம்பிக்க வேண்டும். காலையில் கண் விழித்தவுடன் இந்த முறைப்படி குளிர்ந்த நீர் அருந்துவது பல்வேறு நோய்களை அண்ட விடாது.


கண் கருவளையதிற்கு தமிழ் மருத்துவம்

கருவளையம் மறைய பாதாம் எண்ணெய் மருத்துவம்

பாதாம் எண்ணையை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கருவளையம் மறையும். இரவில் பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும்.


கண் கருவளையம் மறைய  வெள்ளரிக்காய் மருத்துவம்

வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.


கண் கருவளையம் மறைய உருளைக்கிழங்கு மருத்துவம்

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து பஞ்சில் தொட்டு கண்ணனுக்கு அடியில் தடவ வேண்டும்.15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கண் கீழ் கருவளையம் மறைந்து நல்ல பலனைப் பெறலாம்.


கண் கருவளையம் மறைய தக்காளி மருத்துவம்

ஒரு ஸ்பூன் தக்காளி சாருடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து கருவளையத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


கருவளையம் மறைய கற்றாளை மருத்துவம்

சோற்றுகற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.


கருவளையம் மறைய தேங்காய் எண்ணெய் மருத்துவம்

சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.


கருவளையம் மறைய டீ பேக் மருத்துவம்

டீ பேக்கை ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்த பின் அதை வைத்து கண்ணின் கருவளையத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் கருவளையம் மறைய தொடங்கும்.


கருவளையம் மறைய திராட்சை விதை எண்ணெய் மருத்துவம்

பொதுவாகவே முகத்திற்கு திராட்சை விதை எண்ணெய் மிகவும் நல்லது. கண்ணுக்கு அடியில் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறையும்.


கருவளையம் மறைய ரோஸ் வாட்டர் ஒரு மருந்து

பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் 15  நிமிடங்கள் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.


கருவளையம் மறைய தேன் மருத்துவம்

தேனை கண்ணுக்கு கீழ் தடவி 15  நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் கருவளையம் மறையும்.


கருவளையம் மறைய எலுமிச்சை சாறு மருத்துவம்

எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.


கருவளையம் நீங்க புதினா சாறு மருத்துவம்

புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும்.


கருவளையம் மறைய பால் ஒரு மருந்து

குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.


கருவளையம் மறைய ஆலிவ் ஆயில் மருத்துவம்

ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும்.


கருவளையம் மறைய குங்குமப்பூ மருத்துவம்

பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும்.


கருவளையம் மறைய மஞ்சள்,பாதாம் எண்ணெய் மருத்துவம்

மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.


கண் கருவளையம் மறைய  கேரட் மருத்துவம்

கேரட்டை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.
———————————————————-
உருளைக் கிழங்கு – Urulaikilangu – Potatoes
ரோஸ் வாட்டர் – Rose water – Rose Water
பாதாம் பருப்பு – Paadaam paruppu – Almond
புதினா – Puthina – Mint
தக்காளி – Thakkaali – Tomato
மஞ்சள் – Manjal – Turmeric
தேன் – Thean – Honey
வெள்ளரிக்காய் – Vellarikkaai – Cucumber
பால் – Paal – Milk
டீ பேக் – Tea Pack – Tea Pack
சோற்றுக் கற்றாளை – Sotrukkatraalai – Aloe vera
ஒலிவ் எண்ணெய் – Olive ennai – Olive oil
எலுமிச்சை – Elumichai – Lemon
தேங்காய் எண்ணெய் – Thengai Ennai – Coconut Oil
திராட்சை – Thiratchai – Grapes
கேரட் – Karat – Carrot
குங்குமப்பூ – Kungumapoo – Saffron
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.