தொப்பை குறைய எளிய இயற்கை வீட்டு மருத்துவம்

தொப்பை ஏற்படக் காரணங்கள்

மனிதர்களின் உடல் அழகையும் உடல் ஆரோகியத்தையும் கெடுப்பது வயிற்றில் ஏற்படும் தொப்பை ஆகும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்பதாகும். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்பில்லாமல் இருப்பது ஆகும். தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு தொப்பை கட்டாயம் உண்டாகும். பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகளினால் கூட தொப்பை உண்டாகலாம். குறிப்பாக கர்ப்பபையில் நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தினால் தொப்பை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எண்ணெய் பலகாரங்கள் அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு வயிற்றில் கொழுப்பு சேர்ந்து தொப்பை ஏற்படுகிறது.

தொப்பையை குறைக்க உதவும் மருத்துவம்

தொப்பையை குறைக்க தண்ணீர்

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தண்ணீர் ஒன்றே எரிபொருளாக இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகமாகிறது. ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் வறட்சியைச் தவிர்ப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல் எடை குறைப்பிற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே தண்ணீர் அருந்துவதை சாதாரணமாக எடுத்துகொள்ள வேண்டாம். செம்புபாத்திரத்தில் வைத்திருந்து குடிக்கும் தண்ணீரில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் தண்ணீரிலே கிடைத்துவிடும். மேலும் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.


தொப்பையை குறைக்க பூண்டு

பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் மிக அதிகம். நல்ல கொழுப்பினை அதிகரித்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் பூண்டு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைப்பில் மாற்றம் தெரியும். எனினும் வெறும் வயிற்றில் பாலில் பூண்டை வேக வைத்து எடுத்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு சிறிய அளவு பாத்திரத்தில் 10 முதல் 20 தோல் உறிக்கப்பட்ட‌ பூண்டுகளைப் போட்டு அவற்றில் கையால் எடுக்கப்பட்ட தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். 20 முதல் 40 நாட்கள் கழித்துப் பார்த்தால் அவை தேனில் நன்றாக ஊறியிருக்கும் அவற்றில் இரண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர மிக விரைவில் உங்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் (கொலஸ்ட்ரால்) நீங்குவது மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள தொப்பையையும் குறைக்க உதவுகிறது.


தொப்பையை குறைக்க எலுமிச்சை சாறு

நமது உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் இருக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சைச் சாறு அருந்துவது மிகவும் நல்ல பலனைத் தரும். அது மட்டுமல்லாமல் எலுமிச்சை நமக்குத் தெரியாக பல மருத்துவச் செயல்களை உடலில் நிகழ்த்துகிறது. நமது உடலில் உள்ள கெட்ட நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், வளர்சிதைமாற்றத்தைத் (Metabolism) தூண்டி உடல் வலுவுடன் இருக்கவும் எலுமிச்சை உதவுகிறது. வளர்சிதைமாற்றம் (Metabolism) அதிகரித்தாலே உடல் சுறுசுறுப்படைந்து தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கித் தொப்பையைக் குறைக்க மிகவும் வழிவகுத்துவிடும்.


தொப்பையை குறைக்க மீன் உணவு

அசைவப் பிரியர்கள் ஆடு மற்றும் கோழிக்கறிகளுக்குப் பதில் மீனை அதிகம் உணவில் சேர்த்து வந்தால் கெட்ட கொழுப்புகளுக்குப் பதில் உடலுக்குத் தேவையான‌ நல்ல கொழுப்புகள் கிடைக்கும். அனைத்து வகையான மீன்களிலும் ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இவை வயிற்றில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக டுனா, சாலமன் மற்றும் நமது கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் மீன்களில் இந்த ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது.


தொப்பையை குறைக்க இஞ்சி

பெரும்பாலும் அசைவ உணவுகளில் நம் வீட்டில் இஞ்சி சேர்ப்பது வழக்கம். இஞ்சி பொதுவாகவே கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. இஞ்சியில் அதிகளவு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துத் தொப்பை குறைவிற்கு வழிவகுக்கிறது.

இஞ்சி சாற்றினைக் காலையில் அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. டீ குடிப்பவர்கள் இஞ்சி டீ குடிக்கலாம்.


தொப்பையை குறைக்க கிரீன் டீ

இப்போது கிரீன் டீ அருந்துவது ஒரு வழக்கமாக இளைய தலைமுறையினரிடையே பரவி வருகிறது. பசும் தேநீரில் உள்ள  உயிர்வளியேற்றஎதிர்ப்பொருள் (Antioxidants) கெட்ட கொழுப்பினைக் கரைத்து தொப்பையைக் குறைக்க உதவுகிறது. மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.


தொப்பையை குறைக்க ஆப்பிள் பழம்

தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியத்தைப் பற்றிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. ஆப்பிள் பழத்தில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்(Antioxidants) என்பவை உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் கரைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்குச் சிறந்த பழமாகக் கருதப்படுகிறது.


தொப்பையை குறைக்க சிறுதானியங்கள்

சிறுதானியங்கள் நம்க்குக் கிடைத்தம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். தினமும் காலையிலோ அல்லது மதியமோ சிறுதானியங்களில் ஏதாவது ஒன்றை உண்டு வந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும். முக்கியமாகக் குதிரைவாலி மற்றும் கேழ்வரகு போன்றவை பசி ஏற்படுவதைக் கட்டுபடுத்தி மிக அதிகமான உணவு உட்செல்வதைத் தடுக்கிறது.


தொப்பையை குறைக்க நல்ல தூக்கம் மற்றும் சரியான நேரத்தில் தூங்குதல்

மனிதனின் உடல் ஒரு நாளில் செய்யும் வேலைகளுக்கு ஈடான உடல் ஓய்வு கட்டாயம் தேவை. குறைந்தது 7 முதல் 8 மணிவரையான நல்ல‌ தூக்கம் தேவை. உடல் உழைப்பைத் தவிர மூளைக்குக் கொடுக்கும் வேலைகளும் உடலுக்குச் சோர்வைத் தரும். அதனால் ஒரு நாளில் வேலையே செய்யாமல் சோம்பலாக இருந்தாலும் நல்ல தூக்கம் தேவை. தூக்கமே இல்லாமல் இருப்பது உடல் எடை அதிகரிப்பதை அதிகரிக்கும். ஆனால் சரியான நேரத்தில் தூங்கி காலையில் விரைவில் எழுந்தால் நமது உடலில் வளர்சிதைமாற்றம் (Metabolism) பாதிக்கப்படாமல் மென்மேலும் வளர்ந்து தொப்பை போடுவதைத் தடுக்கிறது.


தொப்பையை குறைக்க காலை உணவைக் கண்டிப்பாக உண்ணவும்

உணவைக் குறைத்து அதாவது ஏதாவது ஒரு நேர உணைவைத் தவிர்த்து விட்டால் உடல் எடை அதிகமாவதைத் தவிர்த்து விடலாம் என மிகச் சிலர் நினைப்பர். அது முற்றிலும் தவறான எண்ணம். உண்மையில் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு நான்கு வேளைச் சாப்பிட வேண்டும். அதாவது உங்கள் வயிற்றினை வெறும்னே போடக் கூடாது. எப்பொழுதெல்லாம் பசி எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தேவையான அளவு சாப்பிட வேண்டும். முக்கியமாகக் காலையில் முடிந்த அளவு எட்டு மணிக்கு முன்பே நன்றாகப் போதுமான அளவு உண்ண வேண்டும். அதாவது காலை உணவு மதிய உணவைப் போல் அதிகமாகவும், மதிய உணவு சற்றே குறைவாகவும், இரவு உணவு குறைவாகவும் இருக்க வேண்டும். இடப்பட்ட நேரத்தில் பசி எடுத்தால் பழங்கள் மற்றும் சத்துள்ள நிலக்கடலை, பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.


தொப்பையை குறைக்க தயிர்

தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.


தொப்பையை குறைக்க பட்டை

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.


தொப்பையை குறைக்க நடைப்பயிற்சி

தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தொப்பை குறைவதோடு நீரிழிவு நோய் ஏற்படாமலும் தடுக்கப்படுகிறது.
———————————————————-
தயிர் – Thayir – Curd
இஞ்சி – Inchi – Ginger
ஆப்பிள் – Apple – Apple
தண்ணீர் – Thanneer – Water
எலுமிச்சை – Elumichai – Lemon
பூண்டு – Poondu – Garlic
பட்டை – Pattai – Pattai
கிரீன் டீ – Green Tea – Green Tea
மீன் – Meen – Fish
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.