பேன் தொல்லை நீங்க இயற்கையான தமிழ் மருத்துவ முறைகள்

பேன் தொல்லை நீங்க

பேன் என்பது தலையில் வாழும் சிறு சிறு பூச்சி போன்ற உயிரினமாகும். இது மனித இரத்தத்தை உணவாக உட்கொண்டு வாழும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இது அதிக அளவில் காணப்படும். காரணம் இது எளிதில் ஒருவர் தலையில் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. ஒருவர் பயன் படுத்திய சீப்பு, தலையணை அல்லது போர்வையை மற்றவர் பயன் படுத்தினால் அவருக்கும் பேன் வந்துவிடும். தலையில் பேன் வந்துவிட்டால் தலையில் அரிப்பு மற்றும் சிறு புண்கள் ஏற்படும். பேன் வந்தால் மனிதனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. தலையில் ஏற்படும் அரிப்பு ஒன்றே இதனால் ஏற்படும் பிரச்சனையாகும்.


பேன் சில உண்மைகள்:

  • பேன் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகம் காணப்படுகிறது.
  • பேன் ஒரு நிமிடத்திற்கு 9 இன்ச் வரை முடியில் நகரும் தன்மை படைத்தது.
  • மனிதனின் இரத்தத்தை உணவாக கொண்டுதான் பேன் வாழுகிறது.
  • மனித இரத்தம் இல்லாமல் பேனால் இரண்டு நாட்கள் வாழ முடியும்.


பேன் தொல்லையில் இருந்து விடுபட தமிழ் மருத்துவம்

பேன் தொல்லை நீங்க பேன் சீப்பு

பேன் சீப்பு என்பது பேனை எடுப்பதற்காகவே தயாரிக்கப்படுபவை. இது எளிதில் கிடைக்கக்கூடிய சீப்பு. இதில் பற்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதனால் சின்ன பேன் மற்றும் அதன் முட்டை கூட தப்ப முடியாது. வாரம் ஒருமுறை ஈரமான தலையில் இந்த சீப்பை வைத்து சீவினால் பேன் வந்து விடும். ஆனால் இந்த முறையை பின்பற்றுவதற்கு முடியின் வேர் வலிமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த சீப்பை பயன்படுத்தும்போது அதிக தலைமுடி உதிரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மற்றவர்கள் பேன் முழுவதும் வெளியேறும் வரை வாரம் ஒருமுறை இந்த முறையை பின்பற்ற வேண்டும்.


பேன் தொல்லை தீர கற்றாளை மருந்து

தலைக்குக் குளிப்பதற்கு முன் தலையில் சோற்று கற்றாளை ஜெல் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் தலைக்குக் குளித்தால் பேன் தொல்லை அறவே ஒழிந்து விடும். சோற்று கற்றாளையை ஜெல் எடுக்கும் போது நன்கு நல்ல தண்ணீரில் கழுவி விட்டு பயன்படுத்த வேண்டும்.


பேன் தொல்லை நீங்க பூண்டு, எலுமிச்சை மருத்துவம்

பூண்டில் உள்ள கடின மனம் பேனை விரட்டும் தன்மை கொண்டது. எட்டு பூண்டு  பல்லை எடுத்து நன்கு அரைத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் தலைக்குக் குளித்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


பேன் தொல்லையில் இருந்து விடுபட வினிகர் ஒரு மருந்து

இரவில் வினிகரை தலையில் தேய்த்துக் கொண்டு ஒரு துண்டை தலையில் கட்டிக் கொள்ள வேண்டும். காலையில் ஷாம்பூ போட்டு குளித்தால் பேன் காணாமல் போய்விடும்.


பேன் போக்க தேங்காய் எண்ணெயை வைத்து எளிய முறை

தேங்காய் எண்ணெயை தலையில் நிறைய நிறைய நன்கு தடவி பின் பேன் சீப்பு வைத்து மெதுவாக சீவினாலே பெரும்பாலான பேன்கள் வெளியேறிவிடும்.


பேன் போக்குவதற்கு வினிகர் மற்றும் உப்பு சேர்த்து எளிய மருத்துவ முறை

வினிகருடன் சிறிது உப்பு சேர்த்து தலையில் தேய்த்து ஊற வைத்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


பேன் ஈறு தொலைய வெந்தயம் ஓர் அருமருந்து

ஒரு கைப்பிடி வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் நன்கு அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஒரு அரை மணி நேரம் கழித்து குளித்தால் பேன் தொல்லையில இருந்து விடுபடலாம்.


பேன் ஈறு ஒழிக்க சீதாப்பழ கொட்டை மருந்து

சீதாப்பழ கொட்டையை சேகரித்து அரைத்து விழுதாக்கி அதனை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பேன் வெளியேறி விடும்.


ஈறு பேன் முற்றிலும் ஒழிக்க வேப்பெண்ணை ஒரு தலைசிறந்த மருந்து

வேப்பெண்ணை கடைகளில் எளிதாகக் கிடைக்கும். வேப்பெண்ணையை தலையில் தேய்த்துக் குளித்தால் பேன் குறையும். வேப்பெண்ணை கிடைக்காவிட்டால் வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தாலே நல்ல பலனைப் பெறலாம். ஆனால் வேப்பெண்ணை வாசம் பிடிக்காதவர்களுக்கு இந்த முறை ஒத்து வராது.


பேன் தொல்லை நீங்க பாதாம் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தி சத்தான மருந்து

சிறிது பாதாமை எடுத்துக் கொண்டு எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்துக் கொண்டு அதனை தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் பேன் முழுவதும் வெளியேறி விடும்.


ஈறு பேனை ஒழித்துக் கட்ட வெங்காயம் ஓர் அருமையான மருந்து

நான்கிலிருந்து  ஐந்து சின்ன வெங்காயத்தை எடுத்து அரைத்து அதில் இருந்து சாரை எடுத்து தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்தால் பேன் முழுவதும் வெளியேறிவிடும். சின்ன வெங்காயம் அரைத்து குளித்தால் அதன் வாசம் ஒரு வாரத்திற்கு இருக்கும் அதனால் நன்கு ஷாம்பூ போட்டு அலச வேண்டும்.


தலையில் பேன் ஈறு ஒழிய எலுமிச்சை சாறு ஒரு எளிமையான மருந்து

வெறும் எலுமிச்சை சாறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு வெது வெதுப்பான நீரில் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.
———————————————————-
வெந்தயம் – Venthayam – Fenugreek
வெங்காயம் – Venkayam – Onion
உப்பு – Uppu – Salt
எலுமிச்சை – Elumichai – Lemon
வினிகர் – Vinegar – Vinegar
சோற்றுக் கற்றாளை – Sotrukkatraalai – Aloe vera
பூண்டு – Poondu – Garlic
தேங்காய் எண்ணெய் – Thengai Ennai – Coconut Oil
பாதாம் பருப்பு – Paadaam paruppu – Almond
சீதாப்பழ விதை – Seethapazha vithai – Custard Apple Seed
வேப்பெண்ணெய் – Veppennai – Neem Oil
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.