வயிற்று புண் ஆற

மனிதனின் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது. நாம் உண்ணும் உணவானது குடலை அடைந்ததும் இந்த திரவங்களின் மூலமாக செரிக்க ஆரம்பிகிறது. தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது. காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும். அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும். இதனைத் தவிர்க்க காலை உணவை சரிவர உண்ண வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த அமிலங்கள் அதிக அளவில் சுரக்கும். புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மதுப் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் வயிற்றிப்புண் வருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளன.

வயிற்று புண் அறிகுறிகள்

வயிற்றில் வலி ஏற்படும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி அதிகமாகும். வயிற்றுப் புண்ணை அல்சர் என்றும் குறிபிடுகிறார்கள்.


வயிற்றுப் புண்ணிற்கு தமிழ் மருந்துகள்

வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே வயிற்றுப் புண்ணை விரட்டலாம்.


வயிற்று புண் ஆற சுண்டை வற்றல் மருந்து

வயிற்று புண் ஆற சுண்டை வற்றலை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் .குடல் புண் ஆறி வலி குறையும்.


வயிற்றுப்புண் ஆற மாங்கொட்டை பருப்பு, தேன் மருந்து

மாங்கொட்டைப் பருப்பை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். காலையும் மாலையும் ஒரு சிட்டிகை மாங்கொட்டை பொடியை எடுத்துக் கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.


வயிற்றுப்புண் ஆற மாதுளைத் தோல் ஒரு மருந்து

மாதுளை பழத்தோலை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை மாதுளைப் பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் ஆறும்.


வயிற்று புண் ஆற இலவங்கப் பட்டை மருந்து

வாரம் இருமுறை இலவங்கப் பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் மூலம் உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.


வயிற்று புண் வலி நீங்க பாகற்காய் விதை மருந்து

பாகற்காயின் விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.


வயிற்று புண் ஆற கொத்தமல்லி ஓர் எளிய மருந்து

கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் ஆறும்.


வயிற்று புண் ஆற மணத்தக்காளி கீரை மருந்து

மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் ஆறும்.


வயிற்றுப்புண் ஆற மிளகு தூள், தேன் மருந்து

மிளகைப் போடி செய்து சலித்துக் கொள்ள வேண்டும். இதில் அரை ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இதன் மூலம் அல்சரை குணப் படுத்தலாம்.


வயிற்று புண் ஆற அகத்திக் கீரை, தேன் மருந்து

அகத்திக் கீரையை வேக வைத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.


வயிற்று புண் ஆற ஆலமரப் பால், தேன் மருந்து

ஆலமரத்திலிருந்து  பால் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.


வயிற்றுப்புண் ஆற வால்மிளகுப்பொடி, பால் மருந்து

வால்மிளகைப் போடி செய்து பாலுடன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும்.


வயிற்றுப்புண் ஆற சுக்குத் தூள், கரும்புச் சாறு மருந்து

சுக்குத் தூளை சிறிது எடுத்துக் கொண்டு அதை கரும்புச் சாருடன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும்.


வயிற்று புண் ஆற தேன், பீட்ரூட் மருந்து

வயிற்றுப்புண் ஆற பீட்ருட் கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.




———————————————————-
கொத்தமல்லி – Kothamalli – Coriander
கரும்புச் சாறு – Karumbu saaru – Sugarcane Juice
மிளகு – Milaku – Pepper
பால் – Paal – Milk
மாதுளை – Maathulai – Pomegranate
பீட்ரூட் – Beetroot – Beetroot
வால் மிளகு – Vaal Milagu – Tail Pepper
இலவங்கப் பட்டை – ilavangappattai – Cinnamon bar
தேன் – Thean – Honey
சுக்கு – Sukku – Dried Ginger
பாகற்காய் – Paakarkkaai – Bitter gourd
அகத்திக் கீரை – Agathi Keerai – Agathi Spinach
சுண்டை வற்றல் – Sundai Vatral – Sundai Vatral
மணத்தக்காளி – Manathakkaali – Manattakkali Spinach
மாங்கொட்டை பருப்பு – Maangkottai paruppu – Mango nut dal
ஆலமரப் பால் – Aalamara paal – Banyan tree milk
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.