வேனல் கட்டி குணமாக

வேனல் கட்டி வரக் காரணங்கள்

வேனல் கட்டி கோடை காலத்தில் ஏற்படும் ஒரு உபாதை ஆகும். அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து முகம் மற்றும் உடலில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன.


வேனல் கட்டி வராமல் தடுக்க தண்ணீர் மருந்து

வேனல் கட்டி மறைய மற்றும் ஏற்படாமல் இருக்க முதலில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மட்டுமாவது இந்த பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வேனல் கட்டி மட்டுமல்லாது கோடை காலங்களில் தோன்றும் அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.


வேனல் கட்டி போக வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம்.

வேனல் கட்டி போக சுண்ணாம்பு, தேன் மருந்து

வேனல் கட்டி ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும். அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும்.


வேனல் கட்டிக்கு கற்றாளை மருந்து

கற்றாழையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறையும்.


வேனல் கட்டி மறைய மஞ்சள் மருந்து

வேனல் கட்டி குணமாக மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் வேனல் கட்டியிலிருந்து தப்பிக்கலாம்.


வேனல் கட்டி குணமாக சந்தனம், எலுமிச்சை சாறு மருந்து

சந்தனத்தை உரசிக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்து கனமாக பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகும்.


வேனல் கட்டி குணமாக சோப்பு, மஞ்சள், கல் உப்பு மருந்து

சோப்பை தூளாக்கிக் கொண்டு அதனுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்து வேனல் கட்டி ஏற்புடும் இடத்தில தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் வேனல் கட்டி மறையும்.


வேனல் கட்டி சரியாக நல்லெண்ணெய் குளியல் மருந்து

சூட்டினால் ஏற்படும் கட்டி மறைய வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் வேனல் கட்டி மறையும். நல்லெண்ணெய் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.


வேனல் கட்டி மறைய கடுகு மருந்து

கடுகை அரைத்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில போட்டால் வேனல் கட்டி மறையும்.


வேனல் கட்டி பழுத்து உடைய மஞ்சள் தூள் மற்றும் அரிசி மாவு மருந்து

மஞ்சள் மற்றும் அரிசி மாவையும் சேர்த்து தோசை மாவி போல் கலந்து கொண்டு அதனை கொதிக்க வைத்து களி பதத்திற்கு கிண்டி அதை வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் போட்டால் வேனல் கட்டி பழுத்து உடையும்.


வேனல் கட்டி குணமாக வெள்ளை பூண்டு மற்றும் சுண்ணாம்பு மருந்து

வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வேனல் கட்டு ஏற்பட்ட இடத்தில பத்து போடு வந்தால் வேனல் கட்டி குணமாகும்.


வேனல் கட்டி குணமாக சுண்ணாம்பு, தேன், வெல்லம், வெற்றிலை மருந்து

வெயில் காலங்களில் வேனல் கட்டி நிறைய பேருக்கு வரும். வேனல் கட்டி வந்தால் அதன் வலி மிக அதிகமாக இருக்கும். வேனல் கட்டி குணமாக ஒரு சிறிய தட்டில் சிறிதளவு சுண்ணாம்பை சிறிது தேன் விட்டு குழைக்க வேண்டும். தேன் கிடைக்கா விட்டால் வெல்லத்தை சிறிது நீர் விட்டு குழைக்கலாம். அவ்வாறு குழைக்கும் பொது அது சூடு பறக்க ஒரு கலவையாக வரும். அதை வேனல் கட்டி உள்ள இடத்தில் தடவி அதன் மேல் வெற்றிலையை ஒட்டி விட வேண்டும். வெகு விரைவில் வேனல் கட்டி குணமாகும்.




———————————————————-
வெல்லம் – Vellam – Jaggery
பூண்டு – Poondu – Garlic
நல்லெண்ணெய் – Nallennei – Sesame oil
அரிசி – Arisi – Rice
தேன் – Thean – Honey
கல் உப்பு – Kal uppu – Crystal Salt
கடுகு – Kaduku – Mustard
வெற்றிலை – Vetrilai – Betel
எலுமிச்சை – Elumichai – Lemon
சோப்பு – Soppu – Soap
சந்தனம் – Santhanam – Sandalwood
சோற்றுக் கற்றாளை – Sotrukkatraalai – Aloe vera
சுண்ணாம்பு – Sunnamppu – Lime
மஞ்சள் – Manjal – Turmeric
தண்ணீர் – Thanneer – Water
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.