விக்கல் பொதுவாக உதரவிதானத்தில் (Diaphragm) ஏதேனும் பிரச்சினை இருந்தால் வரும். இந்த உதரவிதானம் என்பது மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் இருக்கும் ஒரு உறுப்பு. உதரவிதானத்தில் பிரச்சினை வரும் போது உதரவிதானம் திடிரென சுருங்கி விடும். இதனால் நாம் சுவாசிக்கும் காற்று அந்த சுருங்கிய பகுதிக்குள் செல்லும் போது விக்கல் ஏற்படும்.
சாதரணமாக வரும் விக்கல் ஒரு பிரச்சினையையும் ஏற்படுத்தாது. ஒரு சிலருக்கு விக்கல் நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்த தொடர் விக்கல் நோயின் அறிகுறியே ஆகும்.
தொடர் விக்கல் நிற்க நெல்லிக்காய் மற்றும் தேன் வைத்து தமிழ் மருத்துவம்
தொடர் விக்கலுக்கு நெல்லிக்காயை (கொட்டையை எடுத்து விட்டு) இடித்து சாறு பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர தொடர் விக்கல் நிற்கும்.
தேன் – Thean – Honey
நெல்லிக்காய் – Nellikkaai – Gooseberry
———————————————————-