பூச்சிக்கடி வலி குறைய

கிராமமானாலும் நகரமானாலும் பூச்சிகள் இல்லாத வீடே இன்று இல்லை. ஏதாவது ஒரு பூச்சியாவது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். நாம் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் இந்த பூச்சிகளின் தொல்லை நம்மை விட்டு அகலாது. பூச்சிகள் இல்லா விட்டாலும் பல்லியாவது நமது வீட்டிற்குள் வந்து நம்மை தொல்லை செய்யும். பூச்சிகளில் கடிக்கும் பூச்சிகள் மற்றும் கடிக்காத பூச்சிகள் என இரண்டு வகை உண்டு. சில பூச்சிகள் நம்மை கடித்து வலியை ஏற்படுத்தும். சில பூச்சிகளின் நீர் நம் மீது பட்டாலோ, நம் மீது உரசினாலோ அரிப்பு, தடிப்பு ஏற்படும். அப்போது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிதில் வலியை குறைக்கலாம்.


பெயர் தெரியா பூச்சி கடிக்கு மக்காச்சோளமாவு, சமையல் சோடா மருந்து

சில பூச்சிகளின் பெயரே நமக்குத் தெரியாது. அது நம்மை கடித்து நமக்கு வலியை ஏற்படுத்தும் போது வீட்டில் உள்ள மக்காச்சோளமாவு, சமையல் சோடா இரண்டையும் கலந்து வெது வெதுப்பான நீருடன் சேர்த்து பூச்சி கடித்த இடத்தில தடவினால் வலி குறையும். இது ஒரு முதலுதவி மாதிரியான மருத்துவம். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் என்ன மாதிரியான பூச்சி என்று உறுதி செய்த பின் அந்த பூச்சிக்கடிக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.


அரணை பூச்சி கடிக்கு சீமை அகத்தி இலை, தேங்காய் எண்ணெய் மருந்து

அரணை நக்கிச் சென்றாலே விஷம். சீமை அகத்தி இலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பூச்சி கடித்த இடத்தில் தடவினால் விஷம் குறையும்.


தேனீ மற்றும் குளவி பூச்சி கடி வலி குறைய மாங்காய் காம்பின் பால் மருந்து

தேனீ, குளவி கடித்தால் தாங்க முடியாத வலி ஏற்படும். அதற்கு மாங்காய் காம்பில் இருந்து வடியும் பாலை கடித்த இடத்தில தடவினால் வலி குறையும்.


தேள் கடி வலி குறைய மிளகு, தேங்காய், பூண்டு, புளி, தேன், எலுமிச்சை சாறு மருந்து

தேள் கடி மிகவும் ஆபத்தான ஒன்றாகும். தாங்க முடியாத வலி ஏற்படும். மிளகுடன் தேங்காய் சேர்த்து மென்று சாப்பிட்டால் தேள் கடி விஷம் குறையும். வெள்ளை பூண்டை அரைத்து விழுதாக்கி பூச்சி கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறிந்து வலி குறையும். புளியை கரைத்து சிறிது குடித்து விட்டு தேள் கொட்டிய இடத்தில சிறிது தடவினால் விஷம் முறிந்து வலி குறையும். தேன், எலுமிச்சைச் சாறு இரண்டையும் குழைத்து கடிவாயில் தடவினாலும் விஷம் இறங்கி வலி குறையும்.


கம்பளிப்பூச்சி அரிப்புக்கு நல்லெண்ணெய், முருங்கை இலை, வெற்றிலை சாறு மருந்து

கம்பளி பூச்சியின் ரோமம் உடலில் பட்டாலே உடல் முழுதும் அரிப்பு எடுக்கும். கம்பளிப் பூச்சியின் ரோமம் உடலில் பட்டால் நல்லெண்ணெயை உடலில் தடவினால் அரிப்பு நீங்கி வலி குறையும். முருங்கை இலையை அரைத்து தடவினாலும் அரிப்பு குறையும். அரிப்பு ஏற்படும் இடத்தில வெற்றிலையை வைத்து சாறு வரும் வரை தேய்த்தாலும் அரிப்பு குறையும்.


விஷக் கடிக்கு ஆட்டுப்பால், கரிசலாங்கண்ணி மருந்து

ஆட்டுப்பாலுடன் கரிசலாங்கண்ணி இலையை சேர்த்து அரைத்து கொடுத்தால் விஷக் கடியால் ஏற்படும் வலி குறையும்.


பூச்சிக்கடிக்கு சுண்ணாம்பு தடவி முதலுதவி

எந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.


பூரான் கடிக்கு ஊமத்தை வேர் மருந்து

பூரான் கடித்தால் உடல் முழுதும் தடிப்புகள் உண்டாகும். ஊமத்தை வேரை சிறிது சிறிதாக வெட்டி நல்லெண்ணெயில் போட்டு குழைத்து வெயிலில் வைத்து ஊற வைத்து எடுத்து உடல் முழுதும் தடவினால் பூரான் கடியினால் உண்டாகும் தடுப்புகள் குறையும்.


பூரான் கடிக்கு மிளகு, வெற்றிலை மருந்து

மிளகை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு வெற்றிலை சாறை விட்டு ஊற வைத்து பிறகு அதை எடுத்து காய வைத்து சாப்பிட்டு வந்தால் பூரான் கடித்த விஷம் குறையும்.


பூரான் கடித்த வலி குறைய துளசி, மிளகு மருந்து

துளசியை காய வைத்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் பூரான் கடி வலி குறையும்.


பூச்சிக்கடி வலி குறைய வெங்காயம் மருந்து

எறும்புகள் போன்ற பல்வேறு விஷமில்லா பூச்சிகள் கடித்து வலி ஏற்பட்டால் அல்லது கடித்த இடத்தில் வீக்கத்துடன் வலி ஏற்பட்டால் உடனே வெங்காயத்தை நறுக்கி கடித்த இடத்தில் தேய்க்க வேண்டும். வெங்காயம் தேய்க்க தேய்க்க வலி காணாமல் போய் விடும்.
———————————————————-
தேங்காய் எண்ணெய் – Thengai Ennai – Coconut Oil
தேன் – Thean – Honey
பூண்டு – Poondu – Garlic
நல்லெண்ணெய் – Nallennei – Sesame oil
வெற்றிலை – Vetrilai – Betel
சுண்ணாம்பு – Sunnamppu – Lime
தேங்காய் – Theangaai – Coconut
மாங்காய் – Maangai – Mango
மிளகு – Milaku – Pepper
ஆட்டுப்பால் – Aattuppaal – Goat milk
வெங்காயம் – Venkayam – Onion
புளி – Puli – Tamarind
துளசி – Thulasi – Basil
எலுமிச்சை – Elumichai – Lemon
மக்காச்சோளமாவு – Makkaachcholamaavu – Maize flour
சமையல் சோடா – Samayal Soda – Baking Soda
முருங்கை இலை – Murungai ilai – Drumstick leaf
ஊமத்தை வேர் – Oomathai ver – Dumbass root
கரிசலாங்கண்ணி – Karichalanganni – Karicalankanni
சீமை அகத்தி இலை – Seemai Agathi ilai – Seemai Agathi leaf
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.