வயிற்று போக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. உடனே கவனிக்கா விட்டால் உடம்பில் உள்ள சத்துக்களை எல்லாம் காலி செய்து விடும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இயற்கையான முறையில் மருந்துகளை செய்து வயிற்று போக்கை குணப்படுத்தலாம்.
வயிற்றுப் போக்கு குணமாக கருவேப்பிலை, சீரகம் மருந்து
வயிற்றுப் போக்கு உடனடியாக நிற்க ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து அம்மியில் வைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகத்தையும் வைத்து மை போல நன்றாக அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு உடனே குணமாகும்.
கருவேப்பிலை – Karuveppilai – Curry leaves
சீரகம் – Seeragam – Cumin
———————————————————-