உடல் தளர்ச்சி நீங்க

நமது உடலில் தளர்ச்சி ஏற்பட தாதுப் பொருட்கள் பற்றாக்குறையே காரணம். தாதுப்பொருட்கள் அதிகம் உள்ள உணவை உண்பதன் மூலம் உடல் தளர்ச்சி நீங்கி உடல் உறுதி பெறலாம். காய்கறிகளில் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. உடல் தளர்ச்சி நீங்க உணவில் சாதத்தை குறைத்துக் கொண்டு காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.


உடல் தளர்ச்சி நீங்க முட்டைக்கோஸ், வெண்ணெய் மருந்து

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி நீங்கும்.


உடல் தளர்ச்சி நீங்க அமுக்கிரா கிழங்குப் பொடி மருந்து

அமுக்கிரா கிழங்கு நம் உடலில் தாது பொருட்களை சீராக வைப்பதற்கு உதவுகிறது. அமுக்கிரா கிழங்கைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால் நரம்பு தளர்ச்சி மூலம் ஏற்படும் உடல் தளர்ச்சி நீங்கும்.


உடல் களைப்பு நீங்க பேரீச்சம் பழம் ஓர் அருமருந்து

தினந்தோறும் ஒரே ஒரு பேரீச்சம்பழத்தை உணவோடு சேர்த்து உண்டு வந்தால் உடல் களைப்பு நீங்கி உடல் பலம் பெறும்.


உடல் தளரச்சி குணமாக முருங்கை ஈர்க்குகள் மருந்து

முருங்கை ஈர்க்குகளை நறுக்கி ரசத்தில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடனடியாக உடல் அசதி நீங்கி உடல் பலத்தைப் பெறலாம்.


உடல் தளர்ச்சி நீங்க வெந்தயக் கீரை மருந்து

தினமும் வெந்தயக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் தளர்ச்சி நீங்கி உடல் பலம் பெரும்.


உடல் தளர்ச்சி நீங்க கல்யாணபூசணி சாறு மருந்து

கல்யாணபூசணி சாறுடன் வெல்லம் சேர்த்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வர உடல் கை, கால், தளர்ச்சி நீங்கி உடல் பலம் பெறலாம்.


உடல் தளர்ச்சி குணமாக அருகம்புல் ஓர் அருமையான மருந்து

அருகம் புல்லை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அரைத்து சம அளவு வெண்ணையுடன் சேர்த்து காலை மாலை என இரண்டு வேளையும் நீண்ட நாட்களுக்கு அருந்தி வர உடல் தளர்ச்சி காணாமல் போகும்.


உடல் தளர்ச்சி நீங்கி பலம் பெற வேப்பம்பூ, நிலவேம்பு மருந்துகள்

வேப்பம்பூ, நிலவேம்பு ஒரு அவுன்ஸ் எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்து விட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர காய்ச்சலுக்கு பின் உண்டாகும் உடல் தளர்ச்சி சரியாகிவிடும்.
———————————————————-
வெண்ணெய் – Vennai – Butter
முருங்கை ஈர்க்குகள் – Murungai irkkukal – Drumsticks stem
கல்யாணபூசணி – Kalyaana poosani – Wedding pumpkin
நிலவேம்பு – Nilavembu – Chiretta
அமுக்கிரா கிழங்குப் பொடி – Amukkiraa kilangu podi – Amakura tuber powder
வேப்பம் பூ – Veappam Poo – Neem flower
முட்டைக்கோஸ் – Muttaikkose – Cabbage
பேரீச்சம் பழம் – Pericham pazham – Dates fruit
அருகம்புல் – Arugampul – Scutch grass
வெந்தயக் கீரை – Venthayakeerai – Fenugreek spinach
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.