உடல் மெலிய

மெல்லிய உடலை பெற விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வாழ்க்கையின் பல காலகட்டத்தில் ஆண் பெண் என இருபாலருக்கும் உடல் பருமன் தான் முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. அதிலும் கல்யாணம் ஆகாத குண்டான ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் பிரகாசமான எதிர்கால வாழ்வே உடல் எடையை குறைப்பதில் தான் இருக்கிறது. வீட்டில்  கல்யாண வயதில் குண்டான மகனையோ மகளையோ வைத்துக் கொண்டு பெற்றோர் படும் மனக்கவலை அனைவரும் அறிந்த ஒன்றே.

நாம் குண்டாய் இருக்கும் போது ஒரு மாதத்திற்கு முன் குண்டாய் காணப்பட்ட நம் குண்டர் கூட்டணியில் இருந்த நம் நண்பரோ உறவினரோ இன்று மெல்லிய உடலுடன் வந்து நமக்கு ஹாய் சொல்லும்போது நம் நெஞ்சில் ஓர் எரிமலையே குமுறிக் கொண்டு இருக்கும். கண்களிலும் வார்த்தையிலும் அது வெடித்து வந்தாலும் ஆச்சர்ய படுவதிற்கில்லை.  ஆணோ பெண்ணோ கல்யாணத்திற்கு முன் கங்கணம் கட்டிக் கொண்டு உடலை குறைத்து விட்டு கல்யாணத்திற்கு பின் தொண்ணூறு சதவிதம் பேர் உடல் மறுபடியும் குண்டாவதை பற்றி கவலை கொள்ளாதது வேறு விஷயம். ஆனால் உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது உடல் பருமன் ஆகும். நமக்கு எந்த வயதனாலும் உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருப்பது நமக்கு ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.

இந்த நவீன கால யுகத்தில் செயற்கையாக உடல் பருமனை குறைக்க பல நவீன யுக்திகள் வந்து விட்டன. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு வித மெல்லிய ஊசிகளை இன்சுலின் போடுவதற்கு பன்படுத்துவர். இந்த ஊசிகளை வயிற்றில் செலுத்தினால் வலியே தெரியாது அந்த அளவிற்கு அதன் ஊசி முனை மெல்லியதாக இருக்கும். இதை போன்ற ஊசிகளை வைத்து கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. ஆனால் இந்த சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது. சாமானிய மக்கள் இந்த சிகிச்சை பக்கம் திரும்பி கூட பார்க்க முடியாது. இதை போன்ற சிகிச்சைகளால் வரும் பின் விளைவுகள் கணிக்க முடியாததாய் இருக்கிறது. உடலை மெல்லிதாய் மாற்றும் என்று கூறும் பாக்கெட் உணவுகளும் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அந்த பாக்கெட் உணவுகளை மட்டும் தான் நீங்கள் சாப்பிடவேண்டும். யாராலும் அது முடியாத காரியம். உடல் பருமனை குறைக்க மருந்துகளும் மருந்து கடைகளில் கிடைகின்றன. முன்பே கூறியது போல் பின் விளைவுகள் கணிக்க முடியாததாய் இருக்கும்.

நாம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களைக் கொண்டே உடலை எளிதாக மெலிய வைக்கலாம். சிறு உடற்பயிற்சியோடு இதனை பின்பற்றினால் கண்டிப்பாக உடல் பருமன் நன்றாக குறையும். நம் தமிழ் மருத்துவத்தில் ஏராளமான மருத்துவ முறைகள் உடலை மெலிய வைக்க கூற பட்டுள்ளன. இங்கே முக்கியமான மருத்துவ முறைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. உங்களுக்கு வசதியான மருத்துவ முறைகளை தேர்ந்து எடுத்துக் கொண்டு விடாமல் மருந்துகளை எடுத்துக் கொண்டு வர வேண்டும். சிறு உடற்பயிற்சியும் சேர்ந்தால் பலனை மிக விரைவில் காண முடியும்.


உடல் மெலிய சோம்பு கலந்த நீர்

சாதாரணமான நீரை குடிப்பதற்கு பதிலாக சோம்பு கலந்த நீரை குடித்தால் உடல் மெலிய நல்ல வாய்ப்பாக அமையும்.


உடல் பருமன் குறைய பூண்டு, வெங்காயம் மருந்து

உண்ணும் உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும்.


உடல் எடை குறைய பப்பாளி சமையல்

பப்பாளிக் காயை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை நன்றாக குறையும்.


உடல் மெலிய எலுமிச்சை நீர் மருந்து

தினமும் காலையில் எழுந்ததும் மிதமான சுடு நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர உடல் எடை குறைவதை காணலாம்.


உடல் பருமன் குறைய சுரைக்காய் சமையல்

வாரம் இரண்டு முறை சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.


உடல் மெலிய கொள்ளுப் பயறு ஒரு அருமையான மருந்து

கொழு கொழுவென குண்டாக இருப்பவர்கள் உடல் இறுகி மெலிய அவர்களின் தினசரி உணவுடன் கொள்ளுப் பயறு சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெகு விரைவில் உடல் மெலிந்து தேவை இல்லாத கொழுப்பு சதைகள் அனைத்தும் காணாமல் போய் விடும்.


உடல் மெலிய முட்டைக்கோஸ், குடமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு காய்கறிகளே மருந்து

உடலை விரைவில் குறைக்க விரும்புபவர்கள் முட்டைக்கோஸ், குடமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டு சாதத்தை குறைக்க வேண்டும். நம் உணவில் பொதுவாக 95 சதவீதம் சாதம் 5 சதவீதம் காய்கறிகள் இருக்கும். சிலருக்கு ஊறுகாய் இருந்தால் .01 சதவீதம் தொட்டுக் கொண்டு 99.9 சதவீதம் சாதம் மட்டுமே உண்பர். இந்த காய்கறி சதவீதத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக் கொண்டே வர வேண்டும். 70 சதவீதம் காய்கறிகளும் 30 சதவிதம் சாதம் அளவிற்கு உண்ணும் பழக்கத்தை கொண்டு வந்தால் உடல் பருமன் மட்டுமல்ல நம்மை எந்த நோயும் அண்டாது. காய்கறி விற்கும் விலையில் இதெல்லாம் சாத்தியமா என்று நினைக்கக் கூடாது. ஒவ்வொரு மாதத்திலும் கண்டிப்பாக ஏதாவது ஒரு காய்கறியின் விலை மிக மிக குறைவாக இருக்கும். அந்த காய்கறியை நிறைய வாங்கி இந்த காய்கறி சதவீத கோட்பாடை நடைமுறைக்கு கொண்டு வரலாம். ஒரே காய்கறியை ஒரே விதமாக வைத்து மருந்து போல் உண்ணாமல் வித விதமாக வைக்க வேண்டும். நாம் மட்டுமல்ல வீட்டில் உள்ளவர்களுக்கும் குறிப்பாக நம் எதிர்காலமான நம் குழந்தைகளுக்கும் இந்த பழக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே மிக எளிதாக கொண்டு வந்து விடலாம். வித விதமாக வைப்பதை பற்றியெல்லாம் கவலை வேண்டாம். இப்போது இருக்கும் மொபைல் போனில் ஏராளமான ஆப்ஸ்கள் உள்ளன. சமையல் என்று தேடினாலே ஆயிரக்கணக்கான ஆப்ஸ்கள் வரும். அந்த ஆப்ஸ்ல் கேரட் என்று தேடினால் நூற்றுக்கணக்கான சமையல் குறிப்புகள் வரும். தினம் ஒன்று வைத்து அசத்தலாம்.


உடல் எடை குறைப்பில் நல்ல பலன் பெற கேரட் ஜூஸ் மற்றும் தேன் மருந்து

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கேரட் சாருடன் தேன் கலந்து குடித்து வர உடல் எடை குறைப்பில் நல்ல பலன் பெறலாம்.


லெமன் டீ உடல் பருமனுக்கு நல்ல மருந்து

தினமும் காலையில் பால் டீ குடிப்பதற்கு பதிலாக லெமன் டீ குடிப்பது உடல் எடை குறைப்பதற்கு மிகவும் உதவும்.


உடல் மெலிய இஞ்சி ஓர் அருமருந்து

உடல் மெலிய இஞ்சி ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. இஞ்சி சாரை டீயுடனோ அல்லது சுடு நீருடனோ சேர்த்து குடிக்கலாம்.


உடல் பருமன் குறைய கொள்ளு ஓர் அருமருந்து

கொள்ளு பயறை அவித்தும் உண்ணலாம். அல்லது ரசம் வைத்தும் உண்ணலாம். கொள்ளு பயறை உணவில் சேர்ப்பதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.


சோற்றுக் கற்றாளை உடலை மெலிய வைக்கும்

வறண்ட சூழ்நிலையிலும் வளரக் கூடிய ஒரு அருமருந்து சோற்றுக் கற்றாளை ஆகும். இதன் பழங்கள் அளப்பரியவை. உடல் பருமன் குறிப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உணவில் வாரம் ஒரு முறை கற்றாழையை சேர்த்து கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்.


உடல் மெலிய வெந்தயக் கீரை மருந்து

வெந்தயக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் பற்றிக் கவலை பட தேவையில்லை. வெந்தயக் கீரையை கூட்டாகவோ அல்லது சப்பாதியாகவோ செய்து சாப்பிடலாம்.


உடல் மெலிய பசலைக் கீரை மருந்து

எங்கும் எளிதாக வளரக் கூடிய கீரை பசலைக் கீரை. இதனை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.


உடல் எடை குறைப்பில் தவிர்க்க வேண்டியவை

சில விஷயங்களை கண்டிப்பான முறையில் தவிர்த்தாலே நாம் உடல் பருமனைக் குறைக்கலாம்.

 • ஒரு நாளைக்கு தேவையான கலோரி உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக கலோரி உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
 • அதிக இனிப்பையும் அதிக எண்ணெய் உள்ள உணவையும் கொஞ்ச நாளைக்கு முற்றிலும் துறக்க வேண்டும்.
 • காலை உணவை தவிர்க்க கூடாது.
 • பால் மற்றும் பால் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 • மாவுசத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
 • உணவு அருந்தியவுடன் தூங்கவோ உடற்பயிற்சி செய்யவோ கூடாது.
 • இரவு உணவை தாமதமாக உண்ணக் கூடாது.
 • வயிறு முட்ட உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • மைதா உணவை அறவே தவிர்க்க வேண்டும்.


உடற்பயிற்சி:

நாம் என்ன உணவு உண்டாலும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இதன் மூலம் சர்க்கரை, உடல் பருமன், இதய நோய்கள் என பல நோய்களில் இருந்து விடுபடலாம். உடற்பயிற்சி இல்லாமலும் உடல் எடை குறைக்கலாம். உடற்பயிற்சியுடன் முயற்சி செய்தால் பலன் விரைவில் தெரியும். மூன்று மாதத்தில் தெரியும் பலன் ஒரே மாதத்தில் காணலாம்.


வெறும் சுடு தண்ணீர் குடிப்பதின் மூலம் உடல் எடை குறைதல்

எந்த விதமான உடற்பயிற்சியும் செய்யாமல் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் சுடு தண்ணீரைக் கொண்டே உடலைக் குறைக்கலாம். இதற்கு நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

 • காலை எழுந்ததும் பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் 4 டம்ளர் வெது வெதுப்பான நீர் அருந்த வேண்டும். பின்பு அரை மணி நேரத்திற்கு எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. இதனை 10 நிமிடத்திற்குள் குடிக்க வேண்டும்.
 • மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் அரை மணி நேரத்திற்கு முன்பு 2 டம்ளர் சுடு நீர் குடிக்க வேண்டும். உணவு உண்ட பின்பு அரை மணி நேரம் பின்பு 2 டம்ளர் சுடு நீர் குடிக்க வேண்டும்.
 • குளிக்க செல்வதற்கு முன்பு 2 டம்ளர் சுடு நீர் குடிக்க வேண்டும். குளித்து முடித்து வந்ததும் 2 டம்ளர் சுடு நீர் குடிக்க வேண்டும்.
 • இவ்வாறு ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இதனை அளந்து வைத்துக் கொண்டு அருந்த வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே மாதத்தில் 3 கிலோ வரை எடை குறைக்கலாம்.
———————————————————-
வெங்காயம் – Venkayam – Onion
கொள்ளுப் பயறு – Kolluppayaru – Horse gram
காய்கறிகள் – Kaaykarikal – Vegetables
இஞ்சி – Inchi – Ginger
சோம்பு – Soambu – Anise
பப்பாளி – Pappaali – Papaya
முட்டைக்கோஸ் – Muttaikkose – Cabbage
குட மிளகாய் – Kuda Milakaai – Umbrella chilli
பசலைக் கீரை – Pasalai keerai – Pasalai Spinach
பாகற்காய் – Paakarkkaai – Bitter gourd
தேன் – Thean – Honey
பூண்டு – Poondu – Garlic
வாழைத்தண்டு – Vaalaithandu – Banana stem
தண்ணீர் – Thanneer – Water
வெந்தயக் கீரை – Venthayakeerai – Fenugreek spinach
முருங்கைக்காய் – Murunkaikkaai – Drumsticks
சுரைக்காய் – Surakkaai – Zucchini
கேரட் – Karat – Carrot
சோற்றுக் கற்றாளை – Sotrukkatraalai – Aloe vera
எலுமிச்சை – Elumichai – Lemon
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.