பொடுகுத் தொல்லை நீங்க எளிய இயற்கையான வீட்டு மருந்துகள்

பொடுகு

முடியில் உள்ள இறந்த செல்களே பொடுகு ஆகும். இது தலையின் மேற்பரப்பை வெகுவாக பாதிக்கிறது. பொடுகுத் தொல்லை உள்ளவர்களுக்கு தலையில் அரிப்பு ஏற்படுகிறது.

பொடுகு ஏற்படக் காரணங்கள்:
எண்ணெய்:

தலையில் நாம் நாள்தோறும் தேய்க்கும் எண்ணெயுடன் தலையில் உள்ள இறந்த செல்கள் சேர்ந்து பொடுகு தோன்றுகிறது.

பூஞ்சைத் தொற்று:

தலையில் உள்ள ஈரப்சையில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு அதுவே வெண்ணிறமாக சில சமயம் பொடுகு போல காணப்படுகிறது.

மனஅழுத்தம்:

 மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு பொடுகு அரிப்புடன் சேர்ந்து வருகிறது. தலை மிகவும் அரிப்புடன் காணப்பட்டால் அவர்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறது என்பதை அறியலாம்.

சுத்தமின்மை:

தினந்தோறும் தலைக்கு தண்ணீர்  ஊற்றி குளிக்க வேண்டும். இதைத் தவறினால் இறந்த செல்கள் அனைத்தும் தலையிலேயே இருந்து பொடுகாக மாறும்.

ஊட்டச்சத்து குறைவு:

அன்றாடம் சரி விகித உணவு எடுத்துக் கொள்ளாவிட்டால் தலையில் பொடுகு தோன்றும்.

இரசாயனம்:

தலைமுடிக்கு அதிக இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லை ஏற்படும்.

உடலில் வறட்சி:

உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காவிட்டால் கூட சிலருக்கு தலை வறண்டு பொடுகு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் தினமும் 2  லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தலை சீவாமை:

தினந்தோறும் தலையை சீவ வேண்டும். சிலர் தலை சீவ மாட்டார்கள். அவர்களுக்கு தலையில் சிக்கு ஏற்பட்டு அதில் அழுக்கு சேர்ந்து பொடுகுத் தொல்லை ஏற்படும்.

மருந்து மாத்திரைகள்:

அதிக மருந்து மாத்திரைகள் நெடு நாட்கள் எடுத்துக் கொள்பவர்களுக்கு பொடுகு ஏற்படும்.

தோல் அலர்ஜி:

தோலில் ஏற்படும் அலர்ஜி சில நேரம் தலையில் ஏற்பட்டு அது பொடுகாகிறது.

பொடுகுத் தொல்லை நீங்க இயற்கையான தமிழ் மருத்துவ முறைகள்

பொடுகுத் தொல்லை நீங்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை மசாஜ்

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறை சம அளவில் எடுத்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க வேண்டும். இரசாயனம் இல்லாத இந்த கலவைக்கு பொடுகைப் போக்கும் தன்மை உண்டு.


பொடுகுத் தொல்லை நீங்க வெந்தயம்

சிறிது வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக அரைத்து விழுதாக்கி அந்த விழுதை தலை முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன் பொடுகுத் தொல்லையும் நீங்கும்.


பொடுகுத் தொல்லை நீங்க தயிர்

தயிரை தலை முழுவதும் நன்றாக தேய்த்து ஒரு அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் பொடுகு நீங்கும்.


பொடுகுத் தொல்லை நீங்க வேப்பிலை சாறு

ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து அரைத்து அந்த சாறை எடுத்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். வேப்பிலைக்கு பொடுகை போக்கும் தன்மை உண்டு.


பொடுகுத் தொல்லை நீங்க ஆரஞ்சு தோல் மற்றும் எலுமிச்சை மருந்து

ஆரஞ்சு தோலை எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு அரைத்து தலையில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பொடுகுத் தொல்லை நீங்கும்.


பொடுகுத் தொல்லை நீங்க தேங்காய் எண்ணெய், ஒலிவ் எண்ணெய், தயிர் மற்றும் தேன் மருத்துவ முறை

2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் ஒலிவ் எண்ணெய் எடுத்துக் கொண்டு நன்கு கலக்கி அந்த கலவையை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்., பின்பு தலையை நன்கு உலர்த்தி தலையில் சிறிது தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் பொடுகுத்தொல்லை கண்டிப்பாக நீங்கும்.


பொடுகுத் தொல்லை நீங்க தயிர் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு கப் தயிறுடன் அரை எலுமிச்சை சாறு சேர்த்து அந்த கலவையை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகு நீங்கும்.


பொடுகுத் தொல்லை நீங்க முட்டை மட்டுமே ஒரு அருமையான மருந்து

இரண்டு முட்டையின் வெள்ளைகருவை எடுத்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை தலைக்கு தேய்த்து ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டு தலையை மூட வேண்டும். பின்பு தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். முட்டையின் மனம் போக இரண்டு முறை தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒரு  முறை இவ்வாறு செய்தால் பொடுகு நீங்கும்.


பொடுகுத் தொல்லை நீங்க பூண்டு மற்றும் தேன்

சிறிது பூண்டுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அரைத்து விழுதாக்க வேண்டும். அந்த விழுதை தலையில் தேய்த்து மசாஜ் செத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இந்த முறையை காலையில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டும். பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
———————————————————-
பூண்டு – Poondu – Garlic
ஒலிவ் எண்ணெய் – Olive ennai – Olive oil
முட்டை – Muttai – Egg
ஆரஞ்சு – Orange – Orange
தேன் – Thean – Honey
தயிர் – Thayir – Curd
தேங்காய் எண்ணெய் – Thengai Ennai – Coconut Oil
எலுமிச்சை – Elumichai – Lemon
வேப்பிலை – Vepilai – Neem leaf
வெந்தயம் – Venthayam – Fenugreek
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.