வேர்க்குரு போக இயற்கையான தமிழ் மருத்துவ முறைகள்

இது வெயில் காலங்களில் உடலில் குறிப்பாக முதுகுப்பகுதி மற்றும் முகத்தில் தோன்றும் சிறுசிறு பருக்கள் ஆகும். வேர்க்குரு ஏற்பட்ட இடத்தில் அதிகமாக அரிப்பு ஏற்படும். எந்த இடத்தில் வேர்வை அதிகம் சுரக்கிறதோ அந்த இடத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதற்கு வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிதில் நிவாரணம் பெறலாம்.

வேர்க்குருவிற்கு வேப்பிலை மருந்து

வேப்பிலை ஒரு நல்ல கிருமி நாசினியாக பயன்படுகிறது. வேர்க்குரு ஏற்பட்ட இடத்தில் வேப்பிலையை பசையாக அரைத்து பூசி சிறிது நேரம் ஊறியதும் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் வேர்க்குருவை ஏற்படுத்தும் கிருமிகளை துரத்தலாம்.


வேர்க்குரு அரிப்பில் இருந்து விடுபட அருகம்புல், மஞ்சள் தூள் மருந்து

அருகம்புல் வேர்க்குருவினால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும் தன்மை கொண்டது. நான்கு:ஒன்று என்ற விகிதத்தில் அருகம் புல்லையும் மஞ்சள் தூளையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இதனை பாதிக்கப்பட்ட இடத்தில பூசி வந்தால் வேற்குருவினால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து விடுபடலாம்.


வேர்க்குரு நீங்க தயிர் ஓர் மருந்து

தயிர் உடலுக்கு குளிர்ச்சி தரும். தயிறை வேர்க்குரு ஏற்பட்ட இடத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் வேர்க்குரு தொல்லையில் இருந்து விடுபடலாம். குளிப்பதற்கு முன் வேர்க்குரு உள்ள இடத்தில் தயிரை பூசியும் குளிக்கலாம்.


வேர்க்குருவில் இருந்து விடுபட பாசிபருப்பு மாவு, கடலை பருப்பு மாவு மருந்துகள்

வெயில் காலங்களில் சோப்பிற்கு பதிலாக பாசிபருப்பு மாவு அல்லது கடலை பருப்பு மாவு தேய்த்து குளித்தால் வேர்குருவில் இருந்து விடுபடலாம்.


வேர்க்குரு குணமாக சந்தனப்பொடி, ரோஸ் வாட்டர் மருந்து

சந்தனப்பொடியையும்  ரோஸ் வாட்டரையும் சேர்த்து குழப்பி பேஸ்ட் ஆக்கிக் கொண்டு வேர்க்குரு ஏற்பட்ட இடத்தில் பத்து போன்று போட்டுக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து அது நன்கு காய்ந்ததும் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் வேர்க்குரு தொல்லையில் இருந்து விடுபடலாம்.


வேர்க்குரு தொல்லையில் இருந்து விடுபட கற்றாழை ஓர் அருமருந்து

வேர்க்குருவிற்கு கற்றாளை ஒரு நல்ல கிருமி நாசினியாக பயன்படுகிறது. சோற்றுகற்றாழையின் மேற்ப்பகுதியில் உள்ள தோலையும் முள்ளையும் நீக்கி விட்டு உள் பகுதியில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து நல்ல தண்ணீரில் நன்கு நாலைந்து தடவை கழுவி விட்டு வேர்க்குரு உள்ள இடத்தில தடவி வர நல்ல நிவாரணம் பெறலாம்.


முகத்தில் தோன்றும் வேர்க்குருவிற்கு முல்தானிமட்டி, ரோஸ் வாட்டர் மருந்து

முல்தானிமட்டிபொடியை ரோஸ் வாட்டருடன் சேர்த்து பேஸ்ட் செய்து வேர்க்குருவின் மீது தடவி காய வைத்து பின்பு கழுவி வர வேர்க்குருவில் இருந்து விடுபடலாம். இந்த மருத்துவ முறையை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். குறிப்பாக இந்த மருத்துவ முறையை இரவு படுக்கைக்கு போகும் முன்பு செய்வது நல்ல நிவாரணம் தரும்.


வேர்க்குருவில் இருந்து நிவாரணம் பெற உருளைக் கிழங்கு மருந்து

உருளைக் கிழங்கை பாதியாக நறுக்கிக் கொண்டு வேர்க்குருவினால் பாதிக்கப்பட்ட இடத்தில தடவி வர நிவாரணம் கிடைக்கும்.


வேர்க்குருவிற்கு தர்பூசணி உடனடி மருந்து

தர்பூசணி பழம் குளிர்ச்சி தன்மை கொண்டது. தர்பூசணி பழ சாரை எடுத்து வேற்குருவின் மீது தடவினால் உடனடி நிவாரணம் பெறலாம்.


வேர்க்குரு குணமாக இஞ்சி மருந்து

இஞ்சி பல மருத்துவ குணம் கொண்டது. இஞ்சியை துருவி தண்ணீரில் போட்டு வேக வைத்து அந்த தண்ணீரில் பருத்தி துணி கொண்டு தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில தடவி வர வேர்க்குரு மறையும்.


வேர்க்குரு குணமாக கொத்தமல்லி, ரோஸ் வாட்டர், சந்தனப்போடி மருந்து

கொத்தமல்லி, ரோஸ் வாட்டர், சந்தனப்போடி இவை மூன்றையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொண்டு வேர்க்குருவில் தடவி காய்ந்தபின் கழுவி வந்தால் வேர்க்குரு மறையும்.


வேர்க்குருவிலிருந்து விடுபட எலுமிச்சை சாறு மருந்து

எலுமிச்சை சாறைத் தேனுடன் கலந்து குடித்து வர வேற்குருவில் இருந்து முழுவதுமாக பதினான்கு நாட்களில் விடுபடலாம். இது உணவாக எடுத்து கொள்ளும் முறை. மற்ற முறைகள் வேற்குருவின் மீது தடவும் முறைகள். வெயில் காலம் ஆரம்பித்த நாளில் இருந்தே இரு வாரத்திற்கு ஒரு முறை இந்த எலுமிச்சை தேன் சாறை எடுத்து வந்தால் வேர்க்குரு வாராமலே தடுக்கலாம்.


வேர்க்குருவிற்கு வெள்ளரிக்காய் மருந்து

வேர்குரு ஏற்பட்டால் அரிப்பு அதிகமாக ஏற்படும். இதனை தடுக்க வெள்ளரிக்காயை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பத்து போட்டுக்  கொண்டால் அரிப்பு நீங்கி நிவாரணம் பெறலாம்.




———————————————————-
இஞ்சி – Inchi – Ginger
மஞ்சள் – Manjal – Turmeric
சோற்றுக் கற்றாளை – Sotrukkatraalai – Aloe vera
வெள்ளரிக்காய் – Vellarikkaai – Cucumber
எலுமிச்சை – Elumichai – Lemon
சந்தனம் – Santhanam – Sandalwood
தர்பூசணி – Tharpoosani – Watermelon
பாசிபருப்பு மாவு – Paasiparuppu maavu – Nutmeg flour
உருளைக் கிழங்கு – Urulaikilangu – Potatoes
முல்தானிமட்டி – Multhanimatti – Multanimatti
கடலை பருப்பு மாவு – Kadalai paruppu maavu – Bengal gram dal powder
ரோஸ் வாட்டர் – Rose water – Rose Water
வேப்பிலை – Vepilai – Neem leaf
கொத்தமல்லி – Kothamalli – Coriander
தயிர் – Thayir – Curd
அருகம்புல் – Arugampul – Scutch grass
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.