இக்காலத்தில் மலச்சிக்கல் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரு தீராத பிரச்சினை. மலச்சிக்கல் சரியாக அற்புதமான தமிழ் மருந்துகள் நிறைய உள்ளன.
மலச்சிக்கல் சரியாக சுக்கு மருந்து
நாம் குடிக்கும் நீரை தினமும் கொதிக்க வைத்து ஆற வைத்து குடிப்பது நலம் தரும். அவ்வாறு குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டி அதில் போடலாம். அப்படியே குடிக்க முடியாவிட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். பல அருமையான மருத்துவ குணங்களைக் கொண்ட சுக்கு மலச்சிக்கலை முற்றிலுமாக குணப்படுத்தும்.
மலச்சிக்கல் பிரச்சனை சரியாக கடுக்காய் மருந்து
மலச்சிக்கல் சரியாக அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடிக்க வேண்டும். ஒரு பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். கடுக்காய் பொடி கலந்த நீரை குடிப்பதால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இந்த கடுக்காய் பொடி மருத்துவத்தை தினம் செய்து வந்தால் மலச்சிக்கல் காணாமல் போய் விடும்.
மலச்சிக்கல் சரியாக வாழைப்பழம் மருந்து
ஆம். மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் ஒரு எளிமையான அருமருந்து. மலச்சிக்கல் உள்ளவர்கள் மலச்சிக்கல் சரியாக தினமும் இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம்.
மலச்சிக்கல் குணமாக அரைக்கீரை ஒரு மருந்து
அரைக்கீரையை பத்து நாட்களுக்கு உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
மலச்சிக்கல் தீர மிளகு, சீரகம், உப்பு சேர்த்து மருந்து
மிளகு, சீரகம், உப்பு மூன்றையும் பொடி செய்து வைத்துக் கொண்டு சுடு சாதத்தில் சேர்த்து நெய் விட்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
மலச்சிக்கல் குணமாக எண்ணெய் குளியல் மருத்துவம்
வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேயத்து குளித்தால் உடல் உஷ்ணத்தினால் உண்டாகும் மலச்சிக்கல் வராது.
மலச்சிக்கலுக்கு நார்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளே மருந்து
மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க நார்ச்சத்துக்கள் மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் சரியாக அத்திப் பழம் ஒரு மருந்து
உலர்ந்த அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து காலையில் உட்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
மலச்சிக்கலுக்கு பப்பாளிப் பழம் ஒரு மருந்து
பப்பாளிப் பழத்தை உணவிற்கு முன் எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம்.
மலச்சிக்கலில் இருந்து விடுபட காரட்ஜூஸ் ஒரு மருந்து
மலச்சிக்கலில் இருந்து விடுபட காரட் ஜூஸ் பருகி வரலாம்.
மலச்சிக்கல் முற்றிலும் குணமாக பசலைக் கீரை மருத்துவம்
பொதுவாக அனைத்து கீரை வகைகளும் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. குறிப்பாக பசலைக்கீரை உண்டால் மலச்சிக்கல் என்பது வரவே வராது. தினம் ஓர் கீரை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் முற்றிலும் குணமாகும்.
மலச்சிக்கலினால் அவதி படாமல் இருக்க காலையில் சுடுநீர் மருந்து
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரை பருகினால் மலசிக்கலினால் அவதி படாமல் இருக்கலாம்.
குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு தேன் ஒரு மருந்து
ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் பாலில் சிறிது தேன் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல் சரியாகும்.
குழந்தைகளின் மலச்சிக்கல் குணமாக ஆளிவிதை ஓர் மருந்து
ஆளிவிதையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு தண்ணீர் மட்டுமே அருமருந்து
தண்ணீர் நிறைய கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் குணமாகும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலுக்கு ஓமம் ஓர் மருந்து
ஒரு டம்ளர் குடிக்கும் அளவுக்கு மிதமான சூடான நீரில் ஒரு ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து மலச்சிக்கல் உள்ள குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் சரியாகி விடும்.
குழந்தைகளின் மலச்சிக்கல் உடனே குணமாக உலர் திராட்சை ஓர் அருமையான மருந்து
உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து அதை ஜூஸாக அடித்து குழந்தைக்கு கொடுத்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும். இந்த உலர் திராட்சை ஜூஸ் வடிகட்டியும் குடுக்கலாம் வடிகட்டாமலும் குடுக்கலாம்.
குழந்தைகளின் மலச்சிக்கல் தீர சோம்பு நீர் ஒரு நல்ல மருந்து
சோம்பை கருகாமல் வறுத்து பின் ஒரு டம்ளர் தண்ணீரில் அதை போட்டு கொதிக்க விட்டு அது கால் டம்ளர் ஆனதும் அதை குழந்தைக்குக் குடிக்க கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் நன்கு குணமாகும்.
வாழைப்பழம் – Vaalaipazham – Banana
கடுக்காய் – Kadukkaai – Kadukkai
பப்பாளி – Pappaali – Papaya
நல்லெண்ணெய் – Nallennei – Sesame oil
மிளகு – Milaku – Pepper
ஓமம் – Omam – Basil
சோம்பு – Soambu – Anise
தேன் – Thean – Honey
கருவேப்பிலை – Karuveppilai – Curry leaves
உலர்திராட்சை – Ular Thiratchai – Dry Grapes
பழங்கள் – Pazhangal – Fruits
உப்பு – Uppu – Salt
தண்ணீர் – Thanneer – Water
சுக்கு – Sukku – Dried Ginger
பசலைக் கீரை – Pasalai keerai – Pasalai Spinach
அரைக்கீரை – Araikkeerai – Araikkirai
சீரகம் – Seeragam – Cumin
கேரட் – Karat – Carrot
அத்திப்பழம் – Athipazham – Fig Fruit
ஆளிவிதை – Aalivithai – Linseed
———————————————————-