பெண்கள் முகத்தில் மீசை போன்ற தேவையில்லாத முடிகள்
ஆண்களுக்கு முகத்தில் முடி வளருவது இயற்கை. ஆனால் சில பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் ஆகும். அதுவும் மேல் உதட்டின் மேலே மீசை போல பெண்களுக்கு முடி இருந்தால் சொல்லவே வேண்டாம். தாழ்வு மனப்பான்மை உருவாவதற்கு அந்த முடியே முக்கிய காரணம் ஆகி விடும்.
பெண்களுக்கு முகத்தில் முடி தோன்றக் காரணங்கள்
ஹார்மோன்
சில பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை இன்றி காணப்படும். அப்பொழுது முகத்தில் முடி அதிகமாக வளரும்.
உயர் இரத்த அழுத்தம்
சில பெண்கள் உயர் இரத்த அழுத்தத்திற்க்கு மாத்திரைகள்(minioxidil) சாப்பிடுவார்கள். அந்த மாத்திரையினால் கூட முகத்தில் முடி வளர வாய்ப்பு அதிகம்.
நீர்க்கட்டி
இன்று பெரும்பாலான பெண்கள் நீர்க்கட்டியினால் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பபையில் நீர்க்கட்டி தோன்றினால் உடலில் ஆண் ஹார்மொன் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் பெண்களுக்கு முகத்தில் அதிகம் முடி முளைக்கும். இதற்கு சரியான மருத்துவ முறைகளை பின்பற்றுவதன் மூலம் பலன் பெறலாம்.
உடல் பருமன்
சிலருக்கு அதிக உடல் பருமன் காரணமாக கூட முகத்தில் முடி வளரலாம். உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.
மரபியல் காரணங்கள்
சில பெண்களுக்கு மரபியல் காரணங்களால் முகத்தில் முடி வளரலாம். நல்ல முடிக்கட்டு உள்ள குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இயற்கையாகவே முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
முகத்தில் தோன்றும் தேவையற்ற முடிக்கு முடிவு கட்டும் தமிழ் மருத்துவங்கள்
முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க தேன் மற்றும் எலுமிச்சை சாறு
தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த நீரை முகத்தில் நன்றாக மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள சிறிய முடிகள் அனைத்தும் போய்விடும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க மஞ்சள் மற்றும் பப்பாளி
பப்பாளியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள முடிகள் நீங்கும். பப்பாளியை கையில் பிடித்து மசாஜ் செய்யும் அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மேல் மஞ்சள் தூள் தூவி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
முகத்தில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க சர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழ சாறு
ஒரு வாணலியில் கால் கப் தண்ணீரை ஊற்றி சூடேற்றி தண்ணீர் சூடானதும் அதில் கால் கப் எலுமிச்சை சாறை சேர்த்து 2 கப் வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை குறைத்து வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு சிறிது நேரம் அந்த கலவையை குளிர வைக்க வேண்டும். முகத்தில் சிறிது பவுடர் போட்டு அதன் மீது இந்த கலவையை தடவி அது சற்று காய்ந்ததும் பஞ்சை வைத்து அதனை எடுக்க வேண்டும். பஞ்சை எடுக்கும் பொழுது முடி வளரும் திசையிலேயே எடுக்க வேண்டும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முட்டை வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளை கருவை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி அந்த கலவையை முகத்தில் தடவிக் கொண்டு சிறிது நேரம் கழித்து அது காய்ந்ததும் எடுக்க வேண்டும். எடுக்கும் பொழுது அதனுடன் சேர்ந்து முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளும் சேர்ந்து வந்து விடும்.
முகத்தில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு
உருளைக்கிழங்கு சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் கடலை மாவு சிறிது சேர்த்து ஒரு ஸ்பூன் தேன் , 4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கடலை மாவு காய்ந்ததும் அதனுடன் சேர்ந்து தேவையற்ற முடிகளும் சேர்ந்து வந்து விடும்.
முகத்தின் தேவையற்ற முடிகளை நீக்க பப்பாளி மற்றும் கற்றாளை
சிறிது பப்பாளி எடுத்துக்கொண்டு அதனுடன் கற்றாளை ஜெல் சேர்த்தி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் , சிறிது கடுகெண்ணெய், கடலை மாவு சேர்த்து முகல்தில் நன்கு பூசிக் கொள்ள வேண்டும். அந்த கலவை நன்கு காய்ந்ததும் முகத்தைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். வாரத்திற்கு 3-4 முறை இந்த முறையை பின்பற்ற வேண்டும்.
முகத்தின் முடிகளை நீக்க குப்பைமேனி மற்றும் மஞ்சள் தூள்
ஒரு கைப்பிடி குப்பைமேனி செடியை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதனை நன்கு அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். இந்த விழுதுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் உள்ள முடிகளில் தடவ வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து முகத்தை நன்கு கழுவ வேண்டும். இந்த முறையை 6 வாரங்கள் தொடர்ந்து செய்து வர நல்ல பலனைக் காணலாம்.
முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க வெந்தயம் மற்றும் பச்சைப்பயிறு
வெந்தயத்தையும் பச்சைப்பயிரையும் சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தேயைற்ற முடி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல பலனைக் காணலாம்.
முகத்தின் தேவையற்ற முடிகளை நீக்க பூண்டு சாறு
பூண்டு சாறினை எடுத்துக் கொண்டு அதனை தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்கு கழுவ வேண்டும். தினமும் ஒரு முறை இந்த முறையை பின்பற்றலாம்.
முகத்தில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க கற்றாளை
கற்றாளை ஜெல்லை எடுத்து முகம் முழுவதும் நன்கு தேய்த்து மச்சாக் செய்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை நன்கு கழுவ வேண்டும். தினமும் இந்த முறையைப் பின்பற்றினால் நல்ல பலனைக் காணலாம்.
சர்க்கரை – Sarkkarai – Brown Sugar
தேன் – Thean – Honey
எலுமிச்சை – Elumichai – Lemon
கற்றாளை – Katraalai – Cactus
மஞ்சள் – Manjal – Turmeric
உருளைக் கிழங்கு – Urulaikilangu – Potatoes
சோற்றுக் கற்றாளை – Sotrukkatraalai – Aloe vera
பூண்டு – Poondu – Garlic
பச்சைப்பயிறு – Pachaipayiru – Green Pulses
வெந்தயம் – Venthayam – Fenugreek
பப்பாளி – Pappaali – Papaya
குப்பைமேனி – Kuppaimeni – Acalphaindica
முட்டை – Muttai – Egg
———————————————————-