ஒருவருக்கு சளி ஏற்படும் போது கூடவே மூக்கடைப்பும் தொற்றிக் கொள்கிறது. மூக்கடைப்பு ஏற்படும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அது எரிச்சலை உண்டாகும். சளியிலிருந்து விடுபட்டால் மூக்கடைப்பு தானாக சரியாகிவிடும். மூக்கடைப்பிற்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே நிவாரணம் பெறலாம்.
மூக்கடைப்பு குணமாக வேப்ப இலை, தேன் மருந்து
வேப்ப இலையை மையாக அரைத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு உருண்டை உண்டு வர வேண்டும். இதனை உண்ட பின்பு ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள கூடாது. வேப்ப இலை செரிக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதனை வாழ் நாள் முழுதும் பின்பற்றலாம். இதனால் மூக்கடைபை உண்டாகும் அலர்ஜி மட்டுமல்லாமல் எல்லா விதமான அலர்ஜியும் சரியாகி விடும். வயிற்றில் உள்ள கிருமிகளையும் நீக்கும்.
மூக்கடைப்பு நீங்க மிளகு, தேன் மருந்து
10 அல்லது 12 மிளகாய் இரவில் இரண்டு ஸ்பூன் தேனில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை சாப்பிட வேண்டும். மிளகை நன்கு மென்று சாப்பிடுவது நலம். இதன் மூலம் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மூக்கடைபிற்கு வினிகர் ஆவி பிடித்தல்
மூக்கடைப்பு ஏற்படும் போது உடனடி நிவாரணம் பெற ஆவி பிடிக்க வேண்டும். மூக்கு ஒழுகுதலும் கட்டுப்படும். அரை வாளி நீரில் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து ஆவி பிடித்தால் நல்ல பலனைப் பெறலாம்.
மூக்கடைப்பு குணமாக இஞ்சி டீ மருந்து
இஞ்சு சாறு கலந்த டீ குடிப்பதன் மூலம் மூக்கடைபில் இருந்து விடுபடலாம்.
சுடு நீர் குளியல் மூலம் மூக்கடைப்பை நீக்குதல்
மூக்கடைப்பு ஏற்படும் போது சுடு நீரில் ஒரு குளியல் போட்டால் மூக்கடைப்பு தானாக சரியாகி விடும்.
மூக்கடைப்பிற்கு தண்ணீர் மற்றும் உப்பு வைத்தே நிவாரணம்
இரண்டு கப் வெது வெதுப்பான நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு குணமாகும். பெரியவர்கள் தினமும் மூக்கை சுத்தம் செய்வதற்கு ஒரு துளி உப்பு நீரை உள்ளங்கையில் வைத்து ஒரு மூக்கின் துவாரத்தை அடைத்து மறு மூக்கு துவாரத்தின் வழியாக உள் இழுப்பர். இவ்வாறு மறு மூக்கு துவாரத்திற்கும் செய்வர். நாம் தினமும் செய்யாவிட்டாலும் மூக்கடைப்பு உள்ள நாட்களிலாவது செய்தல் நலம் பயக்கும்.
மூக்கடைப்பு உடனே சரியாக வெங்காயம் மருந்து
வெங்காயத்தை நறுக்கி முகர்ந்து பார்த்தல் மூலம் மூக்கடைப்பை நீக்கலாம். அல்லது சிறிது வெங்காயத்தை சாப்பிடாலும் மூக்கடைப்பு நீங்கும்.
மூக்கடைப்பு நீங்க சுக்கு, பால், சர்க்கரை மருந்து
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
மூக்கடைப்பு குணமாக மஞ்சள், சுண்ணாம்பு மருந்து
இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சுண்ணாம்பு எடுத்து கலந்து பத்து போடும் பதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நெற்றி மற்றும் மூக்கின் மேல் தடவிக் கொண்டால் மூக்கடைப்பு நீங்கி நிவாரணம் பெறலாம்.
மூக்கடைப்பு குணமாக தூதுவளை ரசம் ஓர் அருமையான மருந்து
சாதாரணமாக வீட்டில் ரசம் செய்யும் போது அதில் தூதுவளை சேர்த்து செய்து சாப்பிட்டால் சளி மற்றும் மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம்.
மூக்கடைப்பு குணமாக கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி மருந்து
கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி இரண்டையும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் மூக்கடைப்பு குணமாகும்.
சர்க்கரை – Sarkkarai – Brown Sugar
வெங்காயம் – Venkayam – Onion
வினிகர் – Vinegar – Vinegar
நெல்லிக்காய் பொடி – Nellikkaai podi – Gooseberry powder
இஞ்சி – Inchi – Ginger
மிளகு – Milaku – Pepper
சுண்ணாம்பு – Sunnamppu – Lime
மஞ்சள் – Manjal – Turmeric
தேன் – Thean – Honey
கடுக்காய் பொடி – Kadukkaai podi – Kadukkai Powder
உப்பு – Uppu – Salt
தூதுவளை – Thoothuvalai – Solanum Trilobatum
பால் – Paal – Milk
வேப்பிலை – Vepilai – Neem leaf
சுக்கு – Sukku – Dried Ginger
தண்ணீர் – Thanneer – Water
———————————————————-