இருமல் சளி குணமாக எளிய வீட்டு வைத்திய முறைகள்

இருமல் என்பது நுரையீரலை பாதுகாக்க நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு. நுரையீரல் பாதையில் கிருமிகள் மற்றும் புகையினால் ஏற்படும் அரிப்பினை போக்குவதற்காக இருமல் உண்டாகிறது. இருமல் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இருமல் என்பது வேகமாக நுரையீரலில் உள்ள காற்றை வாய் மூலம் வெளிப்படுத்துவதாகும். அவ்வாறு செய்யும் பொழுது நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும். இருமல் மூலம் கிருமிகள் நீங்குவதால் நோய் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இருமல் சில சமயங்களில் மற்ற நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். அந்த நோயை குணப்படுத்துவதன் மூலம் இருமலை போக்கலாம்.

சளி இருமல்:

இந்த வகையான இருமல் சளி இருக்கும் பொழுது ஏற்படும். இருமும் பொழுது சளி வெளியேறும். சளி ஒரு வகையான வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. சளி குறையும் பொழுது தானாகவே இருமல் நின்று விடும்.

வறட்டு இருமல்:

வறட்டு இருமல் வரக்காரணம் தூசி, புகை, ஆஸ்த்மா, புகைபிடித்தல் போன்றவையாகும். வறட்டு இருமலின் போது சளி வெளியேறுவதில்லை. சில மருந்துகளின் பக்க விளைவினால் கூட வறட்டு இருமல் ஏற்படலாம்.

நம் வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டே இருமல் சளியை முற்றிலுமாக குனபடுத்தலாம்

இருமல் குணமாக  சித்தரத்தை, உலர் திராட்சை கஷாயம் மருந்து

சித்தரத்தையுடன்(5 கிராம்) உலர் திராட்சையைச் சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் இருமல் உடனே தணியும்.


சளி மூக்கடைப்பு குணமாக  தூதுவளை, சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் மருந்து

தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டிச் சாப்பிட்டால் இருமல் சளி மூக்கடைப்பு குணமாகும்.


சளி மூக்கடைப்பு குணமாக  நெல்லிக்காய், மிளகு,  தேன் மருந்து

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள்  தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.


சளி குணமாக, இருமல் குணமாக புதினா, மிளகு மருந்து

புதினா இலை (ஒரு கைப்பிடி), மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.


இருமல் சளி குணமாக  மற்றும் நுரையீரல் பிரச்சனை குணமாக பூண்டு , மிளகு , தக்காளி , கொத்தமல்லி மருந்து

பூண்டு, மிளகு, தக்காளி, கொத்தமல்லி சேர்த்து ரசம் வைத்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் சளி மற்றும் நுரையீரல் கோளாறுகளை உடனே குணப்படுத்தும்.


குழந்தைகளின் கக்குவான் இருமல் குணமாக பெருங்காயம் மருந்து

பெருங்காயத்தை நீர் சேர்த்து அரைத்து குழந்தைகைளின் நெஞ்சில் தடவினால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.


வறட்டு இருமல் குணமாக பெருங்காயம், கோழி முட்டை மருந்து

பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவை கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் தீரும்.


சளி மூக்கடைப்பு குணமாக விரலி மஞ்சள் வாசனை மருந்து

விரலி மஞ்சளை தீயில் சுட்டு முகர்ந்தால் தலைவலி, இருமல் சளியினால் வரும் மூக்கடைப்பு, தலைபாரம் போன்றவை தீரும்.


சளி குணமாக மஞ்சள், பூண்டு மருந்து

மஞ்சள் தூளுடன் பூண்டை நசுக்கி உச்சந்தலையில் தேய்த்துக் கொண்டால் சளி பிடிக்காது. தலையில் நீர் கோர்க்காது. சில பெண்கள் தலை குளிக்கும் போது அடிக்கடி சளி பிடிக்கும். அவர்கள் குளிப்பதற்கு முன் இவ்வாறு மஞ்சள் தூள் தூவி பூண்டை நசுக்கி உச்சந்தலையில் தேய்த்து பின் குளிக்கலாம்.


வறட்டு இருமல் குணமாக மிளகு, கடலை , பனங்கற்கண்டு மருந்து

மிளகுடன் சம அளவு உடைத்த கடலையைச் சேர்த்து பொடி செய்து பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் புகைச்சல் போன்றவை உடனே குணமாகும்.


இருமல் உடனே குறைய முருங்கை கீரை, தேன் , சுண்ணாம்பு மருந்து

முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் உடனே நீங்கும்.


மார்புசளி இருமல் குணமாக வெங்காயம், தேன் மருந்து

வெங்காயச் சாற்றி தேன் கலந்து குடித்து வந்தால் மார்புச் சளி இருமல் குணமாகும்.


சளி ஒழுகுவது நிற்க வெற்றிலை மருந்து

வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களைக் காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.


தொண்டை புண் இருமல் குணமாக வெற்றிலை, மிளகு , பனங்கற்கண்டு மருந்து

வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தொண்டைபுண் இருமல் குணமாகும்.


மார்பு சளி குணமாக, சுவாச கோளாறு குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து

வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.


இருமல் குணமாக நாவல்பழம் மருந்து

நாவல்பழத்திற்கு இருமலை தணிக்கும் சக்தி உண்டு. இருமல் ஏற்பட்ட காலங்களில் நாவல்பழம் உண்டு வந்தால் விரைவில் இருமல் குணமடையும்.




———————————————————-
தூதுவளை – Thoothuvalai – Solanum Trilobatum
முருங்கை இலை – Murungai ilai – Drumstick leaf
நெல்லிக்காய் – Nellikkaai – Gooseberry
சுண்ணாம்பு – Sunnamppu – Lime
விரலி மஞ்சள் – Virali Manjal – Finger shaped Turmeric
மிளகு – Milaku – Pepper
உலர்திராட்சை – Ular Thiratchai – Dry Grapes
தேன் – Thean – Honey
சீரகம் – Seeragam – Cumin
பூண்டு – Poondu – Garlic
கடலை – Kadalai – Bengal gram dal
இஞ்சி – Inchi – Ginger
சித்தரத்தை – Sitharathai – Sitharathai
பனங்கற்கண்டு – Panagkarkandu – Panagkarkandu
மஞ்சள் – Manjal – Turmeric
வெங்காயம் – Venkayam – Onion
பெருங்காயம் – Perungayam – Asafoetida
வெற்றிலை – Vetrilai – Betel
புதினா – Puthina – Mint
தக்காளி – Thakkaali – Tomato
கொத்தமல்லி – Kothamalli – Coriander
முட்டை – Muttai – Egg
நாவல்பழம் – Naavalpazham – Blackberries
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.