நினைவாற்றல் வளர

நினைவாற்றல் வளர வல்லாரைக் கீரை ஒரு அற்புதமான மருந்து

நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.


நினைவாற்றல் வளர வில்வபழம், வெண்ணைய், சர்க்கரை மருந்து

நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.


நினைவாற்றல் மற்றும் மூளை சுறுசுறுப்புக்கு இலந்தைபழம், கருப்பட்டி மருந்து

இலந்தைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்படைந்து நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.


நினைவாற்றல் வளர கருஞ்சீரகம் ஓர் அருமருந்து

கருஞ்சீரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்து காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம் என்று கூறுவர். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இக்கருஞ்சீரகமானது தமிழ் மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி நன்கு வளரும்.


மூளை நரம்பு பலம் பெற்று நினைவாற்றல் வளர நாயுருவி வேர் மற்றும் கரிசலாங்கன்னி வேர் மருந்து

சிலருக்கு மூளை நரம்பு பலவீனத்தால் மறதி ஏற்படும். அவர்களுக்கு இந்த மருந்து மிகவும் பயன்படும். தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.


நினைவாற்றல் பெருக வல்லாரைக் கீரை கூட்டு மருந்து

மறதி என்றாலே வல்லாரைக் கீரை சாப்பிடச் சொல்லி கேட்டிருப்போம். வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.


நினைவாற்றல் பெருக முந்திரிப் பருப்பு ஓர் மருந்து

தினமும் நான்கு முந்திரி பருப்பை சாபிட்டால் நினைவாற்றல் கூடி மறதி குறைவதை கண் கூடாக பார்க்கலாம்.


நினைவாற்றல் வளர மிளகு மற்றும் தேன் மருந்து

மிளகைப் பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மறதி நீங்கி நினைவாற்றல் பெருகும்.


நினைவாற்றல் அதிகரிக்க பீர்க்கங்காய் வேர் ஓர் மருந்து

பீர்க்கங்காய் வேர் எடுத்து நன்கு சுத்தம் செய்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி அந்த கஷாயத்தை குடித்து வந்தால் மூளை பலம் பெற்று நினைவாற்றல் நன்கு வளரும்.


மூளை பலம் பெற்று நினைவாற்றல் வளர பசலைக் கீரை ஒரு மருந்து

பசலைக் கீரை பார்க்க வெற்றிலை போன்று தோற்றம் அளிக்கும். எளிதாக இதை நாம் வீட்டில் வளர்க்கலாம். இதன் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.


நினைவாற்றல் பெருக பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி மருந்து

நினைவாற்றல் பெருக பாதாம் பருப்பு, வெண்டைக்காய்,  தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.


ஞாபக மறதியை போக்க கேரட் மருந்து

கேரட் கண்ணுக்கு மட்டும் அல்ல மூளைக்கும் நல்லது.  உணவில் கேரட் அதிகம் சேர்த்து கொண்டால் ஞாபக மறதியை போக்கலாம்.


ஞாபக மறதியை போக்க மீன் ஒரு மருந்து

ஒமேகா 3 ஆசிட்ஸ் நிறைந்திருக்கும் மீனை உணவில் அதிகம் சேர்த்தால் மூளை பலம் பெரும். ஞாபக மறதி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.


புதிர் விளையாட்டு

மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக புதிர் விளையாட்டு விளையாடினால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.


நல்ல தூக்கம்

மறதிக்கு முக்கிய காரணமாக இருப்பது தூக்கமின்மைதான். நன்றாக தூங்கினால் மூளைக்கு ஓய்வு கிடைத்து நினைவாற்றல் நன்கு வளரும். குழந்தைகளுக்கு இரவில் படிக்கும் பழக்கத்தை மாற்றி அதிகாலை எழுந்து படிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.


உடற்பயிற்சியின் மூலம் நினைவாற்றலை பெருக்குதல்

தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் மூளை சுறு சுறுப்படைந்து நினைவாற்றல் பெருகும்.


பொருட்களை தொடர்பு படுத்துதல்

புதிய விஷயத்தை நினைவில் கொள்வதற்கு நமக்கு முன்பே தெரிந்த ஒரு பொருளோடு தொடர்பு படுத்தி நினைவில் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
———————————————————-
வெண்ணெய் – Vennai – Butter
கருஞ்சீரகம் – Karuncheeragam – Black Cumin
வெண்டைக்காய் – Vendaikkaai – Ladyfinger
மிளகு – Milaku – Pepper
பாதாம் பருப்பு – Paadaam paruppu – Almond
மீன் – Meen – Fish
கருப்பட்டி – Karuppatti – Jaggery
தக்காளி – Thakkaali – Tomato
கேரட் – Karat – Carrot
தேன் – Thean – Honey
சர்க்கரை – Sarkkarai – Brown Sugar
முந்திரிப் பருப்பு – Munthiri paruppu – Cashew nut
வில்வபழம் – Vilavapazham – Archery fruit
வல்லாரைக் கீரை – Vallaaraikkeerai – Vallarai Spinach (Indian Pennywort)
இலந்தைபழம் – Ilanthaippazham – Ber fruit
நாயுருவி வேர் – Nayuruvi Vear – Nayuruvi root
பசலைக் கீரை – Pasalai keerai – Pasalai Spinach
பீர்க்கங்காய் வேர் – Peerkkangaai Vear – Gourd root
கரிசலாங்கன்னி வேர் – Karichalankanni ver – Karicalankanni root
———————————————————-Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.