நீர்கட்டி பிரச்சனை குணமாக இயற்கை மருத்துவம்

பெண்களுக்கு நீர்க்கட்டி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறாகும். ஆங்கிலத்தில் பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள்(Cysts) கர்ப்பப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்ரோம் ஆகும். தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நீர்க்கட்டிக்கு தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மாதவிடாய்

பெண்களுக்கு கர்ப்பப்பையில் சினை முட்டைகள் உருவாகி அவை ஹார்மொன்களினால் (Harmon) சுழற்சிக்கு(cycle) உட்பட்டு உடைவதே மாதவிடாய் ஆகும்.முதல் மாதவிடாய் பதிமூன்று முதல் பதினெட்டு வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. ஹார்மோன்களின் வேறுபாடால் மாதவிடாய் சுழற்சி(Menstrual Cycle) ஏற்படுகிறது. இந்த சுழற்சியினால் கருப்பை புறணி திடமாக தொடங்குகிறது. கருப்பை புறணி திடத்தன்மை வயதிற்கேற்பவும் மாதவிடாய் சுழற்சியின் எந்த நிலையில் இருகிறார் என்பதை பொருத்தும் வேறுபடும். மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பகட்டத்தில் கருப்பை புறணி திடமடைய தொடங்கும் அதே நேரத்தில் கரு முட்டையும் வளர தொடங்கும். மாதவிடாய் சுழற்சியின் பதினான்காம் நாள் முழு வளர்ச்சியடைந்த முட்டை விடுவிக்கப்படுகிறது. இது ஒவுலேஷன் (Ovulation) எனப்படும். அந்த முட்டை ஆணின் விந்தணுவிற்காக காத்திருக்கும். ஆணின் விந்தணு கருமுட்டையை அடைந்தால் கருவுறுதல் நடைபெறுகிறது. அப்போது கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கருப்பை புறணி வழங்குகிறது. ஆணின் விந்தணு கருமுட்டையை அடையாத பட்சத்தில் கருப்பை புறணி இரத்தமாக வெளியேறுவதே மாதவிடாய் ஆகும்.

நீர்க்கட்டியினால் மாதவிடாய் பாதிப்பு

நீர்க்கட்டியினால் மாதவிடாய் சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பாளி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் உள்ளவர்களுக்கு அன்றோஜென் (Androgen insensitivity syndrome) எனப்படும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால் அவர்களுக்கு ஒவுலேஷன் எனப்படும் கருமுட்டையை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில்லை. அதனால் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடைய முடிவதில்லை. அதனால் கருவுறுதல் நடைபெறாது. இந்த காலத்தில் பெரும்பான்மையான குழந்தையின்மை பிரச்சினைக்கு நீர்க் கட்டியே காரணம் ஆகும்.

பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் காரணங்கள்:

பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோமின் முதன்மை காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அசாதாரணமான ஹார்மோன்களின் உற்பத்தியும் பரம்பரை காரணிகளும் முதன்மை காரணிகளாக நம்பப்படுகிறது. மற்றுமொரு காரணியாக ஆன்றோஜென் எனப்படும் ஆண் ஹார்மோன் உற்பத்தி கருதப்படுகிறது. ஆன்றோஜென் ஹார்மோன் பெண் உடலில் உற்பத்தி ஆவது இயல்பு என்றாலும் நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு இது அசாதாரணமாக அதிகமாக உற்பத்தி ஆகிறது. அதிகப்படியான இன்சுலின் ஹார்மோன் ஆன்றோஜென்னின் அளவை அதிகரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் மேட்போர்மின்(Metformin) எனப்படும் சுகர் மாத்திரைகளை நீர்க்கட்டிக்கு அறிவுறுத்துகிறார்கள்.

நீர்க்கட்டியின் அறிகுறிகள்:

இதன் அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பெரும்பாலானவர்கள் கூறும் ஒரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி(Irregular Periods). இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோனான ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், மார்பகத்தின் அளவு குறைதல், முடி கொட்டுதல், குரலில் வேறுபாடு, முகப்பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படுகிறது.


இனி நீர்க்கட்டிக்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்.

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்துக்கள்

நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும். கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும். கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.

காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும். இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம். முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்.


நீர்க்கட்டி பிரச்சனை குணமாக மோர், பச்சிலை மருந்துக்கள்

வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள் மோர். இதனுடன் பச்சிலை எனப்படும் மூலிகையை கலந்து குடித்து வர நீர்க்கட்டி குணமாகும். பச்சிலை என்பது வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகை ஆகும். இது துளசியை ஒத்த மனமும் குணமும் கொண்டது. அன்றாடம் இந்த கலவையை அருந்தி வர நல்ல  வித்தியாசத்தை காணலாம்.


நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கச்சக்காய் மருந்து

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கச்சக்காயை உண்டு வர நீர்க்கட்டிகள் கரையும். இந்த காய்க்கு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் குணம் உண்டு.


நீர்கட்டி பிரச்சனை சரியாக வெந்தயம் மருந்து

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு கனையதால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. வெந்தயமும் வெந்தய கீரையும் இன்சுலின் அளவை அளவாக வைக்க உதவுகின்றன. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். பின்பு மதிய உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தய கீரையை சமைத்தும் உண்ணலாம்.


நீர்க்கட்டி பிரச்சனை சரியாக இலவங்கப்பட்டை மருத்துவம்

இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். காலையில் தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் இலவங்கப்பட்டையை தூவி கொள்ளலாம். இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.


நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதைகள் மருந்து

இந்த விதைகளில் ஒமேகா சத்து மற்றும் புரத சத்து நிரம்பி உள்ளது. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம். உடல் பருமனுக்கும் இந்த ஆளிவிதைகள் பரிந்துரைக்கப்படுகிறது.


நீர்க்கட்டி பிரச்சனை குணமாக துளசி மருந்து

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் எனப்படும் ஆண்களின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்பதை அறிவோம். துளசி ஆன்றோஜென்களின் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எட்டு துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அல்லது துளசியுடன் கொதிக்க வைத்த நீரையும் அருந்தலாம்.


நீர்க்கட்டிக்கு தேன் மருத்துவம்

உடற்பருமனும் பாலி சிஸ்டிக் ஓவரியன் ச்ய்ன்றோமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. உடல் எடையை குறைத்தால் நீர்க்கட்டி தானாக குறைந்து விடும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஒரு அருமையான மருந்து தேன். தேனை காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சம்பழ சாறு கலந்து அருந்த உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் நீர்க்கட்டி தானாக மறைந்து விடும்.


நீர்க்கட்டிக்கு நெல்லிக்காய் மருந்து

நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குலள் வைக்க உதவுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது. நெல்லிக்காய் சாறை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்த உடல் எடை குறையும். அதோடு இன்சுலின் அளவும் கட்டுக்குள் வரும்.

நீர்க்கட்டிக்கு பாகற்காய் மருந்து

பாகற்காய் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க பெரும்பங்கு வகிக்கிறது. இன்சுலின் அளவு கட்டுக்குள் இருந்தால் அன்றோஜென் அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதனால் நீர்க்கட்டி அறிகுறிகள் குறைய தொடங்கும். பாகற்காயை வாரத்தில் ஐந்து நாட்கள் சமைத்து உண்ண வேண்டும்.
———————————————————-
பாகற்காய் – Paakarkkaai – Bitter gourd
ஆளிவிதை – Aalivithai – Linseed
துளசி – Thulasi – Basil
மிளகு – Milaku – Pepper
இலவங்கப் பட்டை – ilavangappattai – Cinnamon bar
தேன் – Thean – Honey
பச்சிலை – Pachilai – Green Spinach
மோர் – More – Butter Milk
நெல்லிக்காய் – Nellikkaai – Gooseberry
கச்சக்காய் – Kachakkaay – Kaccakkay
வெந்தயம் – Venthayam – Fenugreek
கழற்சிக்காய் – Kalarchikkaay – Kalarcikkay
———————————————————-3 comments

  1. தேவா says:

    ஜயா, ஆனை நெருஞ்சில் அல்லது பெருநெருஞ்சில் என்று ஒரு செடி உள்ளது. அதை வேரோடடு பறித்து,4 டமளர் நீர் உள்ள பாத்திரத்தில் , வேர்பாகத்தை கையில் பிடித்துகொண்டு செடியின் தலைகளை தண்ணீரில் மூழ்கவிட்டு நன்றாக,கலக்கவேண்டும். அநத நீர் கஞ்சிபோல வெண்மையாக கெட்டியாக மாறும். மாதவிலக்கான மூன்றுநாட்களுக்கு பிறகு தொடர்ந்து மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்கவும். மூன்று நாட்களுக்கு உப்பு புளி ,காரம், புளித்த மோர் சேர்க்ககூடாது. மூன்றுநாட்களுக்கு மேல் குடிக்ககூடாது. இரண்டு மாத்தில் நீர்கட்டி பிரச்சனை குணமாகும்

  2. jayakumar says:

    ithu unmaya deva bro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.