காது மந்தம் குணமாக

காது மந்தம்

காது மந்தம் என்பது எபொழுதும் காதில் இரைச்சல் கேட்பது மற்றும் கேட்கும் திறன் குறைவதே ஆகும். காதின் உட்பகுதியில் உள்ள நரம்பு மண்டலம் (Auditory nerve) பாதிக்கப்பட்டு இவ்வாறு காது மந்தம் ஏற்படுகிறது. சிலருக்கு அதிக சத்தம் உள்ள இடங்களில் அதிக நேரம் செலவிடுவதால் காது மந்தம் ஏற்படுகிறது. காது மந்தம் உண்டானால் கூடவே தலை சுற்றல், தள்ளாட்டம் ஆகிய பிரச்சினைகளும் சேர்ந்து வரும். ஒரு சிலருக்கு திடீரென அதிக சத்தம் கேட்டால் தலை சுற்றி தள்ளாட்டம் ஏற்படும். காதுக்குள்ளே கர்ணநாதம் என்று சொல்லும் வண்டு முழங்குவது போன்றோ, மணி அடிப்பது போன்றோ சத்தம் கேட்கும். இதற்கு ஆங்கிலத்தில் (tinnitus) என்று பெயர். அதிக நேரம் கைபேசியில் பாடல் கேட்பது மற்றும் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது போன்றவை நரம்பு மண்டலத்தை பாதித்து காது மந்த நிலையை ஏற்படுத்தும்.


காது மந்தம் குணமாக தமிழ் மருத்துவ முறைகள்

காது மந்தத்துக்கு வெங்காயம் மருந்து

வெங்காயச் சாறு காது மந்தத்துக்கு சிறந்த மருந்து. வெங்காயச் சாறினை எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தலாம்.


காது மந்தம் மற்றும் காது வலிக்கு கடுகு மருந்து

கடுகை அரைத்து காதின் பின்புறம் பற்று போட காது வலி மற்றும் காது மந்தம் பிரச்சினை நீங்கும்.


காது மந்தம் குறைந்து, காது பலம் பெற கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், தேவதாரம், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், அமுக்கரா, பால், நல்லெண்ணெய் மருந்து

காது பலம் பெற மற்றும் காது மந்தம் சரியாக கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், தேவதாரம், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், அமுக்கரா, பால், நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தேய்த்து வர காது பலன் பெரும்.


காது வீக்கம் மற்றும் காது மந்தம் குணமாக கருஞ்சீரக பொடி, வெற்றிலை மருந்து

கருஞ்சீரகப் பொடியை வெற்றிலைச் சாற்றில் அரைத்துக் காதைச் சுற்றி பற்று போட காது வலி, வீக்கம் குறையும். காதில் ஏற்படும் இரைச்சலும் குறையும்.


காது இரைச்சல் குறைய சுக்குப்பால் மருந்து

சுக்குப்பால் கஷாயம் காதின் இரைச்சலைக் குறைக்கும்.


காது வலி மற்றும் காது மந்தம் குறைய பூண்டு மருந்து

பூண்டைத் தோல் நீக்கித் தலைப் பகுதியைக் கிள்ளிவிட்டுக் காதில் வைக்க, காது வலி மற்றும் காது மந்தம் சரியாகும்.


காது மந்தம் குணமாக துளசி ஓர் அருமருந்து

துளசி சாறினை காலையிலும் மாலையிலும் இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது மந்தம் குணமாகும்.


காது வலி நீங்க ஊமத்தன் தைலம் மருந்து

ஊமத்தன் தைலம் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். தினமும் இரு வேளைகளில் இரு துளி காதில் விட்டு வர காது வலியால் ஏற்படும் காது மந்தம் குணமாகும்.


காது வலி குறைய பூண்டு சாறு மருந்து

பூண்டு சாறினை எடுத்து தினமும் இரண்டு வேலை இரண்டு துளிகளை காதில் விட்டு வர காது வலி குறைவதோடு காது மந்தம் குறையும்.


காது மந்தம் குறைய தூதுவளை கஷாயம் மருந்து

தூதுவளை கஷாயம் தினமும் அருந்தி வர உடலுக்கு நன்மை தருவதோடு காது மந்தமும் குணமாகும்.


காது மந்தம், காது குடைச்சல் நீங்க எலுமிச்சை சாறு மருந்து

எலுமிச்சை சாறினை காதில் ஒரு துளி தினமும் விட்டு வந்தால் காது குடைச்சல் மற்றும் காது மந்தம் குணமாகும்.


காது இரைச்சல் மற்றும் காது மந்தம் நீங்க தைவேளை சாறு, நல்லெண்ணெய் மருந்து

தைவேளைச் சாறினை நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சி காதில் இட்டு வர காது இரைச்சல் மற்றும் காது மந்தம் குணமாகும்.


காது மந்தம் குணமாக கையாந்தகரை இலை, நாயுருவி இலை, சங்கு இலை, தூதுவளை இலை, வேலிப்பருத்தி இலை,  எருக்கம்பூ மருந்து

கையாந்தகரை, நாயுருவி, சங்கு, தூதுவளை, வேலிப்பருத்தி இவற்றின் இலைகளுடன் எருக்கம்பூ சம அளவு எடுத்து அரைத்து 10 நாள், காலை காதில் வைத்து மாலை குளிக்க காதுமந்தம்  தீரும்.


காது மந்தம் சரியாக ஆப்பிள் சைடர் வினிகர், தேன் மருந்து

தினமும் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து மிதமான சுடு நீரில் கலந்து மூண்டு முறை குடித்து வர காது மந்தம் குணமாகும்.


காது மந்தத்திற்கு மர்ஜோரம் மருந்து

ஒரு ஸ்பூன் மர்ஜோரம் எடுத்து நீரில் கொதிக்க வைத்து ஆற வைத்து பத்து நாட்கள் தொடர்ந்து குடித்து வர காது மந்தம் குணமாகும். இந்த முறையை பத்து நாட்களுக்கு மேல் பின்பற்றக் கூடாது.


காது மந்தம் குணமாக இஞ்சி மருந்து

இஞ்சியை அரைத்து  நீரில் கரைத்து வடிகட்டி அந்த நீரை தினமும்  வேளை குடித்து வர காது மந்தம் குணமாகும்.


காது பலத்திற்கு எலும்பு சூப் மருந்து

ஆடு எலும்பு சூப் தொடர்ந்து குடித்து வர காது பலப்பட்டு காது மந்தம் குணமாகும்.


காது மந்தம் குணமாக மீன் உணவு மருந்து

உணவில் மீன் அதிகம் எடுத்துக் கொண்டால் காது மந்தம் குணமாகும்.


காது மந்தம் சரியாக பால் மற்றும் நெய் மருந்து

ஒரு டம்ளர் பாலுடல் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தினமும் குடித்து வர நல்ல பலனைக் காணலாம்.


காது மந்தத்திற்கு அன்னாசி பழம் மருந்து

காது மந்தமாக உள்ளவர்கள் தினமும் உணவில் அன்னாசி பழம் எடுத்துக் கொண்டால் காது மந்தம் குணமாகும். அன்னாசி சாறாகவோ அல்லது பழமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.




———————————————————-
வேலிப்பருத்தி இலை – Veli paruthi ilai – Fence cotton leaf
எலுமிச்சை – Elumichai – Lemon
பால் – Paal – Milk
எருக்கம்பூ – Erukkam poo – Erukkam flower
துளசி – Thulasi – Basil
கடுகு – Kaduku – Mustard
ஊமத்தன் தைலம் – Oomathan thailam – Dumbass balm
பூண்டு – Poondu – Garlic
வெற்றிலை – Vetrilai – Betel
எலும்பு சூப் – Elumbu soup – Bone soup
அதிமதுரம் – Athimathuram – Licorice
வெங்காயம் – Venkayam – Onion
சுக்கு – Sukku – Dried Ginger
சங்கு இலை – Sangu ilai – Conch leaf
கரிசலாங்கண்ணி – Karichalanganni – Karicalankanni
அன்னாசி பழம் – Annaasi pazham – Pineapple fruit
தேன் – Thean – Honey
தேவதாரம் – Thevathaaram – Tevataram
நல்லெண்ணெய் – Nallennei – Sesame oil
நெய் – Nei – Ghee
அமுக்கரா – Amukkaraa – Amukkara
தூதுவளை – Thoothuvalai – Solanum Trilobatum
கருஞ்சீரகம் – Karuncheeragam – Black Cumin
ஆப்பிள் சைடர் வினிகர் – Apple cider vinegar – Apple Cider Vinegar
கையாந்தகரை இலை – Kayanthakarai ilai – Kayanthakarai leaves
நாயுருவி இலை – Nayuruvi ilai – Nayuruvi leaf
மர்ஜோரம் – Marjoram – Marjoram
கஸ்தூரி மஞ்சள் – Kasthoori Manjal – Musk yellow
இஞ்சி – Inchi – Ginger
நெல்லிக்காய் – Nellikkaai – Gooseberry
மீன் – Meen – Fish
தைவேளை – Thaivelai – Taivelai
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.